Latest

10/recent/ticker-posts

FMA ஐ மீண்டும் வழங்கக் கோரி திண்டுக்கல் MPயிடம் மனு !!

  AIBDPA TN

 நிறுத்தப்பட்ட  மாதாந்திர மருத்துவ அலவன்ஸை மீண்டும் வழங்கக் கோரி திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மதுரை மாவட்ட ஓய்வூதியர் சங்கத் தோழர்கள் மனு



தோழர்களே,

        BSNL ஓய்வூதியர்களுக்கு BSNL நிர்வாகத்தால் மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1,000/- மருத்துவ அலவன்ஸை (Fixed Medical Allowance – FMA), 01.10.2026 முதல் நிறுத்தும் முடிவை BSNL நிர்வாகம் மறுபரிசீலனை செய்து, தொடர்ந்து வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி, மதுரை மாவட்ட AIBDPA மற்றும் AIBSNLPWA சங்கங்களின் சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் R. சச்சிதானந்தம், அவர்களிடம் 04.10.2026 அன்று மனு அளிக்கப்பட்டது.

          மனுவில், BSNL ஓய்வூதியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த ரூ.1,000/- மாதாந்திர மருத்துவ அலவன்ஸை திடீரென நிறுத்தியிருப்பது ஓய்வூதியர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

            மேலும், ஓய்வூதியர்களின் நியாயமான கோரிக்கையை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, BSNL நிர்வாகத்தின் FMA நிறுத்தும் முடிவை திரும்பப் பெறச் செய்து, மருத்துவ அலவன்ஸை தொடர்ந்து வழங்கிட நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்து  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

       கோரிக்கையை கவனமாகக் கேட்டறிந்த தோழர் R. சச்சிதானந்தம், MP அவர்கள், ஓய்வூதியர்களின் கோரிக்கையை ஆதரிப்பதாகவும், இது தொடர்பாக DoT செயலருக்கு கடிதம் எழுதுவதாகவும் உறுதியளித்தார்.

இந்த மனு அளிக்கும் நிகழ்வில் AIBDPA சார்பில் தோழர்கள்:

S. ஜான்போர்ஜியா,ACS AIBDPA, 

K. யோகானந்தம், CAO,

S. சுப்பிரமணியன்,

U. ஞானப்பிரகாசம்,

மற்றும் AIBSNLPWA சார்பில்

T. பெஞ்சமின்

ஆகியோர் கலந்து கொண்டனர். 

              மிகச் சரியான தருணத்தில் அவசியமான நடவடிக்கையை மேற்கொண்ட மதுரை மாவட்டத் தோழர்களையும், மாநில உதவிச் செயலர் தோழர் ஜான்போர்ஜியா அவர்களையும் மாநிலச் சங்கம் மனதாரப் பாரட்டுகிறது. நமது மருத்துவ அலவன்ஸ்ஸை திரும்ப மீட்கும் வரை நமது முயற்சிகளும், போராட்டங்களும் தொடரும்.

தோழமையுடன்,
R.ராஜசேகர்
மாநில செயலர்.
AIBDPA TN
4.10.26

Post a Comment

0 Comments