AIBDPA TN – FMA போராட்டம் குறித்து....
தோழர்களே,
பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ₹1,000 மாதாந்திர மருத்துவ அலவன்ஸ் (FMA) நிறுத்தப்பட்டுள்ளதை எதிர்த்து, AIBDPA மத்திய சங்கம் 13 ஓய்வூதியர் சங்கங்களை ஒருங்கிணைத்து அகில இந்திய அளவில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.
எனவே, தோழர்களே, மத்திய சங்கம் அறிவித்துள்ள போராட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்தும் வகையில், அதன் வழிகாட்டுதலின்படி நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுகிறோம்.
மத்திய சங்கத்தின் போராட்ட நடவடிக்கைகளுக்கு மாறாக, தனித்தனியாக CGHSக்கு மாறுவதற்கு விண்ணப்பம் அனுப்புவது அல்லது அதனை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தயவுசெய்து தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மத்திய சங்கம் அறிவித்துள்ள போராட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதில் முழுமையாக ஈடுபடுவோம்.
தோழமையுடன்,
R. ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
AIBDPA தமிழ்நாடு
3.10.26
R. ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
AIBDPA தமிழ்நாடு
3.10.26
0 Comments