Latest

10/recent/ticker-posts

தமிழ் மாநில சுற்றறிக்கை 7/ 2024 dt.17-07-2024.

 தமிழ் மாநிலம் சுற்றறிக்கை 7/ 2024.17-07-2024 

AIBDPA தமிழ் மாநில மையக் கூட்டம் 17.07.2024

தோழர்களே !!

           AIBDPA சங்கத்தின் தமிழ் மாநில மையக் கூட்டம் 17.7.24 அன்று ஆன்லைன் கூட்டமாக நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய சங்க துணை தலைவர் தோழர். S.மோகன்தாஸ், மாநில தலைவர் தோழர்.  C. K. நரசிம்மன், மாநிலச் செயலர் தோழர். R. ராஜசேகர் மற்றும் மாநில துணைத்தலைவர் தோழர். P. மாணிக்க மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 

விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளும் முடிவுகளும் :

1) BSNL  ஒருங்கிணைப்புக்குழு ஆர்ப்பாட்டம். 19.7.24 பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சொத்துக்கள் களவாளப்படுவதை கண்டித்து 19.7.24 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்ட இயக்கத்தை நமது உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்லும் அளவிற்கு விரிவாக நடத்துவது.

 2) BSNL MTNL  ஓய்வூதியர்களின் கூட்டு நடவடிக்கை குழு இயக்கங்கள்*. 

a) 27.8.24 சென்னை CCA  அலுவலகத்தின் முன் பெருந்திரள் தார்ணா இயக்கத்தை நடத்துவதற்கு முறையான மாவட்டங்களுக்கு quota தரப்படும். சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்கள் அதிக அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

b) 12.11.2024 டெல்லி பேரணி.

டெல்லி பேரணியில் நமது மாநில தோழர்கள் பெருமளவு பங்கேற்க வேண்டும். மாவட்டங்களுக்கான கோட்டா அறிவிக்கப்படும்.

c) 2024 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து மகஜர் கொடுக்கும் இயக்கம். சிறப்பாக நடத்திட வேண்டும்.

 3)NCCPA போராட்டங்கள்

NCCPA அறிவித்துள்ள CGHS Addl. டைரக்டர் அலுவலகம் முன்பாக தார்ணா மற்றும் மத்திய அரசு அலுவலகம் முன்பாக நடைபெறும் ஆர்ப்பாட்ட இயக்கத்தையும் எழுச்சியாக நடத்துவதற்கு திட்டமிடப்பட வேண்டும். 

4) மாவட்ட மாநாடுகள்

ஆறு மாவட்டங்கள் தேதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. மற்ற மாவட்டங்களும் உடனடியாக  மாநாட்டுக்கான தேதியை தீர்மானிக்க வேண்டும். 

5) மாநில மாநாடு நடத்துவதற்கு  மாவட்டங்களை நாம் அணுகி கொண்டிருக்கிறோம். விரைவில் மாவட்டமும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும். 

6) CCA அலுவலகத்தில் PDA பகுதியில் பென்ஷன் மற்றும் நிலுவைத் தொகை பட்டுவாடா செய்வதில் உள்ள காலதாமதத்தை நாம் தொடர்ந்து நிர்வாகத்திடம் பேசி வருகிறோம். நிர்வாகமும் அவற்றை கூடுதல் கவனம் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்கள். பிரச்சனைகள் தீரவில்லை எனில் நாம் நம்முடைய போராட்ட முடிவினை  அமுல்படுத்துவோம். 

7) மாவட்டச் செயலர்கள் கூட்டம் 23.07.24

மேற்கண்ட பிரச்சினைகளை விவாதிப்பதற்காக மாவட்ட செயலர்கள் கூட்டம் 23.7.24 அன்று காலை 11 மணியளவில் இணைய வழியில் நடைபெறும். அனைவரும் தவறாமல் கொள்ள வேண்டும். 

தோழமை வாழ்த்துக்களுடன் 
ஆர்.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்

17.7.24

Post a Comment

0 Comments