AIBDPA TN - VRS 2019ல் விருப்ப ஓய்வுபெற்ற தோழர்கள் கவனத்திற்கு !!
தோழர்களே !
VRS 2019 திட்டத்தின் அடிப்படையில் - 2020 - ஜனவரி 31 அன்று விருப்ப ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இழப்பீடு (Ex-gratia) வழங்குவதாக ஒப்புக்கொண்ட BSNL நிர்வாகம் முதல் தவணையை மார்ச் 2020ல் வழங்கியது.
மீதமுள்ள Ex-gratia தொகை 3 தவணைகளாக ( 2020 ஜூன், ஜீலை மற்றும் 2021 மார்ச் மாதங்களில்) வழங்கப்பட்டது. தமிழ் மாநிலத்தில் இந்த இழப்பீட்டுத்தொகை (Ex-gratia) முழுவதற்கும் (TDS) வருமானவரி பிடித்தம் செய்யப்பட்டது.
சில மாநிலங்களில் முதல் தவணைக்கு மட்டும் வருமானவரி விலக்கு அளிக்கப்பட்டது. மற்ற 3 தவணைகளுக்கும் வருமானவரி பிடிக்கப்பட்டுள்ளது.
அதை எதிர்த்து சண்டிகாரைச் சேர்ந்த திரு.ஹரீஷ்குமார் (VRS'19 Retiree) Income Tax Appellate Tribunal ல் தொடர்ந்த வழக்கில் (Ex-gratia payment) இழப்பீட்டுத் தொகை முழுமைக்கும் வருமான வரிவிலக்கு அளிக்க வேண்டும்" என்று 30-5-2025 ல் தீர்ப்பளித்துள்ளது வரவேற்கத்தக்கதாகும்.
(தீர்ப்பின் நகல் கீழே தரப்பட்டுள்ளது)
அதேபோன்று ராஞ்சி Commissioner of Income Tax ( Appeals) நிர்வாகமும் 23-11-2025 அன்று சாதகமான முடிவை அறிவித்துள்ளது.
நமது மாநிலத்தில் இதே போன்று பாதிக்கப்பட்ட VRS'19 ஓய்வூதியர்களும்
அத்தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, தங்களிடம் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட வருமானவரித் தொகையை திரும்ப பெறுவதற்கு...முதற்கட்ட நடவடிக்கையாக, தாமதமாக மனு அளிப்பதற்கு (condonation of delay) அனுமதி கேட்டு கீழ்க்கண்ட மனுவை தாங்கள் சம்பந்தமான விபரங்களுடன் Income Tax Department க்கு அனுப்பலாம் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.
அதை IncomeTax Dept. பெற்றுக்கொண்டதற்கான ஓப்புகைச்சீட்டை (Acknowlegement) பெற்றுக் கொள்வது அவசியம்.
இதுசம்பந்தமாக அனுபவமிக்க ஆடிட்டர்களை ஆலோசித்து தங்கள் மனுவை சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.
அதன்பின்னர் Income Tax Dept.லிருந்து தாக்கீது (Notice) வந்தபிறகு தங்கள் ஆவணங்களை சமர்ப்பித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
நமது மாநில நிர்வாகிகளும் மாவட்டச்செயலர்களும் தங்கள் மாவட்டத்தில் இப்பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ள ஓய்வூதியர்களுக்கு உதவிகரமாகச் செயல்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
R.ராஜசேகர்
மாநிலச்செயலர்
24.1.26
-images-0.jpg)
-images-2.jpg)
-images-1.jpg)
-images-3.jpg)
-images-4.jpg)
-images-5.jpg)
-images-6.jpg)
-images-7.jpg)
-images-0.jpg)
-images-1.jpg)
-images-2.jpg)
0 Comments