Latest

10/recent/ticker-posts

FCPA தமிழ்நாடு - மாநில நிர்வாகிகள் கூட்டம் - 4.9.26

  FCPA தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் 4.9.26 


தோழர்களே,

                    FCPA தமிழ்நாடு மாநில நிர்வாகிகள் கூட்டம் இணையவழி மூலம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தோழர். D. பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார். மாநில அமைப்பாளர் தோழர். R. ராஜசேகர் அவர்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார்.

                  கூட்டத்தில் தமிழ்நாட்டில் தார்ணா நடைபெறவுள்ள திருச்சி, மதுரை மற்றும் கோவை மண்டலக் கூட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

📌 மண்டல தார்ணாக்கள் :-

திருச்சி – செப்டம்பர் 18

மதுரை – செப்டம்பர் 19

கோவை – செப்டம்பர் 22

ஆகிய தேதிகளில் மண்டல தார்ணாக்களை சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

(மேலும், சேலத்தில் ஒரு தார்ணா நடத்த ஆலோசிக்க வேண்டும் என கோவை மண்டல கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட  கருத்துகள் விவாதிக்கப்பட்டது. நிர்வாகிகள் கூட்டம் கோவையில் மட்டும் நடத்துவது என ஒருமனதாக முடிவெடுத்தது.)

📍 சென்னை மண்டல தார்ணா செப்டம்பர் 19 :-

சென்னையில் செப்டம்பர் 19 அன்று ராஜரத்தினம் மைதானம் அருகில் நிகழ்ச்சியை நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி மாலை 3.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

💰 நிதி மற்றும் செலவினங்கள் :-

சென்னை மண்டல  அளவிலான நிகழ்ச்சிகளுக்குத் தேவையான செலவுகளைச் சமாளிக்க மாநில அமைப்புகளிடமிருந்து பங்களிப்புத் தொகையைப் பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் சுமார் 600 தோழர்களுக்கு குறையாமல் கலந்து கொள்ளும் வகையில் சங்கங்களுக்கு இலக்கு தீர்மானிக்கப்பட்டது. 

1) அமைப்பு.     2)  தோழர்கள்.       3)  நிதி (ரூ.)

AIPRPA.                      100.                          10,000

AIBDPA TN.                  25.                           10,000

AIBDPA Chtd.              75.                            5,000

AIFPA.                         100.                            10,000

DRPU.                            50.                             5,000

AIAAPA.                        50.                             5,000

ITPA.                             30.                            5,000

SNPWA (TN & CNI)    25.                              5,000

TPPO.                            25.                              3,000

BDPA. (I)                        25.                             3,000

AIRRF.                            30.                              3,000

SRPS.                             20.                            3,000

மொத்தம்.                 555                      ரூ.67,000

மேலும், வேலூர், திருப்பத்தூர் – 50, 

கடலூர் – 30, 

விழுப்புரம் – 20, 

புதுச்சேரி – 30 

செங்கல்பட்டு,  காஞ்சிபுரம் மாவட்டங்கள் கணிசமாக என மொத்தம் தோழர்கள்  அருகாமை  மாவட்டங்களில் இருந்து  பங்கேற்பதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதன்படி, மேற்கண்ட அமைப்புகள்  தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதிப் பங்களிப்பை உடனடியாக வழங்க வேண்டும் என கூட்டம் கேட்டுக்கொண்டது.

அதனை அந்தந்த அமைப்புகள் உடனடியாக தோழர் N.பஞ்சாட்சரம் அவர்களிடம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

📰 பத்திரிகையாளர் சந்திப்பு :-

செப்டம்பர் 17 அன்று நடைபெறவுள்ள பத்திரிகையாளர் சந்திப்பை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநில நிர்வாகிகளும் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

இறுதியில் DRPU செயலாளர் தோழர் முருகேசன் அவர்கள் நன்றி கூறினார்.

வாழ்த்துக்களுடன்,
R.ராஜசேகர் 
மாநில அமைப்பாளர்
FCPA தமிழ்நாடு.
5.9.26

Post a Comment

0 Comments