சேலம் மாவட்ட AIBDPA எடப்பாடி கிளையின் மூன்றாவது மாநாடு சிறப்பு !!
சேலம் மாவட்ட AIBDPA எடப்பாடி கிளையின் மூன்றாவது மாநாடு தோழர் S.விஜயசுந்தரம் கிளை தலைவர் அவர்கள் தலைமையில் இன்று 6.9.2026 ல் சிறப்பாக நடைபெற்றது. தோழர் D.சரவணன் DOS அவர்களின் அஞ்சலி உரைக்குப் பிறகு தோழர் P. சண்முகம் கிளைச் செயலாளர் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
துவக்க உரையை மாவட்ட பொருளாளர் தோழர் P. தங்கராஜு அவர்கள் நிகழ்த்தினார். பின்னர் மாநில அமைப்பு செயலாளர் தோழர் E.கோபால், மாவட்ட உதவி தலைவர் தோழர் B.சுதாகரன், மாவட்ட செயலாளர் S.தமிழ்மணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். ஆண்டறிக்கை வரவு செலவு கணக்கு வைக்கப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. அடுத்த காலத்திற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு ஏகமனதாக நடைபெற்று தோழர்கள் S.விஜயசுந்தரம், P.சண்முகம், D. சரவணன் ஆகியோர் முறையே தலைவர் செயலர் பொருளாளராக தேர்வாகினர்.
மாநாட்டை வாழ்த்தி திருச்செங்கோடு கிளைச் செயலாளர் தோழர் M.ராஜலிங்கம், மெய்யனூர் கிளைச் செயலாளர் தோழர் P.சம்பத், மெயின் கிளை தோழர் செல்வம், சங்ககிரி பொறுப்புச் செயலாளர் தோழர் மயில்சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இறுதியாக கிளையின் மூத்த தோழரும், உதவி தலைவருமான தோழர் G. நாராயணன் அவர்கள் நன்றி கூற மாநாடு நிறைவு பெற்றது.
மாவட்ட சங்கத்தின் சார்பாக புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
S.தமிழ்மணி
மாவட்ட செயலாளர்
AIBDPA சேலம்




0 Comments