Latest

10/recent/ticker-posts

வெற்றிகரமாக நடைபெற்ற வேலூர் மாவட்ட கிளைச் செயலாளர்கள் கூட்டம் !!

 வெற்றிகரமாக நடைபெற்ற வேலூர் மாவட்ட கிளைச் செயலாளர் கூட்டம் !!





 தோழர்களே !!

      இன்று (05.09.2026) AIBDPA வேலூர் மாவட்ட கிளைச் செயலாளர்கள் கூட்டம் BSNLEU சங்க அலுவலகத்தில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தோழர். C. தங்கவேலு தலைமையேற்றார். கூட்டத்தின் ஆய்படுபொருளை விளக்கி மாவட்டச் செயலாளர் தோழர் முருகன், மாவட்ட பொருளாளர் தோழர். லோகநாதன் ஆகியோர் உரையாற்றினர்.

            கோவையில் நடைபெற்ற மாநில செயற்குழு குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் மாநில தலைவர் தோழர். C.ஞானசேகரன் உரையாற்றினார். கூட்டத்தில் ராணிப்பேட்டை கிளையின் செயலாளர் தோழர். வாசுதேவன், திருப்பத்தூர் கிளையின் செயலாளர் தோழர் குப்புலிங்கம், வேலூர் கிளை செயலாளர் தோழர் G. கிருஷ்ணமூர்த்தி, ஆரணி கிளையின் சார்பாக தோழர் J.வளையாபதி, ஆம்பூர் கிளையின் சார்பாக தோழர் D.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் :-

         மாநில சங்க வேண்டுகோளின் அடிப்படையில் ஆண்டு சந்தாவாக எல்லா உறுப்பினர்களிடமிருந்தும் ரூபாய் 200 அக்டோபர் 15ஆம் தேதிக்குள் வசூலித்து முடிப்பது என்றும்,

 ஓய்வூதியர் சந்திப்பு இயக்கத்தை வெற்றிகரமாக முடிக்க எல்லா கிளைகளிலும் செப்டம்பர் மாத இறுதிக்குள், கிளைக் கூட்டங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 ஓய்வூதியர் முழக்க சந்தாதாரர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு எல்லா கிளைகளும் முயற்சிப்பது எனவும்

 நமது சங்கத்தில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான முயற்சிகளையும் தீவிரமாக செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 மாவட்ட செயற்குழு கூட்டத்தை வேலூரில் நடத்தலாம் என்றும் இந்த மாத இறுதிக்குள் மாநில செயலர் ஒப்புதல் பெற்று நடத்தலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

  செப்டம்பர் 19ஆம் தேதி FCPA சார்பாக நடைபெறும் சென்னை தர்ணாவில் வேலூரில் இருந்து 15 தோழர்களும், ஆம்பூரில் இருந்து 3, திருப்பத்தூர் 3, ஆரணி கிளையின் சார்பாக 3, ராணிப்பேட்டையில் இருந்து 3 பேருமாக 26 தோழர்கள் கலந்து கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

 வேலூர் கிளையின்  ஏரியா பொறுப்பாளர்களின் கூட்டத்தை வரும் 7.9.2026 திங்கட்கிழமை அன்று காலை 10 மணி அளவில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

 இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, கிளைச் செயலாளர்கள் கூட்டத்தை தவறாமல் நடத்த வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

 அவ்வாறு நடத்தப்படும் கூட்டங்களில் எல்லா கிளைச் செயலாளர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

 கிளைச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்களுக்கும் நன்றி.

 தோழமையுடன் 
ப. முருகன் 
மாவட்ட செயலாளர்.

Post a Comment

0 Comments