கோவை மாவட்ட ஒண்டிப்புதூர் கிளை கூட்டம்
தோழர்களே !!
05.9.2026 பொன்மலை தியாகிகளை நினைவு கூறும் தினமாக ஒண்டிப்புதூர் கிளை கூட்டம் தோழர். V. செல்வராஜ் கிளை தலைவர் அவர்கள் தலைமையில் 23 தோழர்கள் கலந்து கொண்ட கிளைக் கூட்டம் ஒண்டிப்புதூர் CITU சங்க கட்டிடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
COM. C. ராஜேந்திரன் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார். தோழர் கிளைச் செயலாளர் அனைவரையும் வரவேற்று பேசினர். மாவட்டச் செயலாளர் தோழர. A.குடியரசு அகில இந்திய மாநாடு நன்றி கூறும் நிகழ்ச்சியில் ஆரம்பித்து தற்போதைய சூழ்நிலையில் ஓய்வூதியமும், ஓய்வூதியர் நிலைப்பாடு, மாவட்ட சங்க செயல்பாடு பற்றி எடுத்துரைத்தார்.
மாவட்ட பொருளாளர் தோழர். N.P.ராஜேந்திரன் வாழ்த்துரை வழங்கினார். வந்திருந்த அனைத்து தோழர்களும் மாநில சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ரூபாய் 200/- நன்கொடை வழங்கினர். ஒரு சில தோழர்கள் நன்கொடை அதற்கு மேலும் பணம் வழங்கியது என்பது பாராட்டுக்குரியது. குடும்ப ஓய்வூதியர் தோழர் ராஜேந்திரன் விஜயலட்சுமி தன்னை சங்கத்தில் இணைத்துக் கொண்டு முதல் முறையாக இக்கூட்டத்தில் பங்கெடுத்தார். அதோடு Rs. 2000/- நன்கொடை கிளை சங்கத்திடம் வழங்கினார். இறுதியாக தோழர். சசிகுமார் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
A.குடியரசு DS/AGS



0 Comments