சிறப்பாக நடைபெற்ற சென்னை CGM O மாவட்டசெயற்குழு கூட்டம்
நாள்:- 01-09-2026
சென்னை மாவட்ட செயற்குழு கூட்டம் 01-09-2026 அன்று பிற்பகல் 02-30 மணிக்கு கிரீம்ஸ் ரோடு, CGM O அலுவலகத்தில் இருக்கும் BSNL ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர். பெர்லின் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் தோழர். கோதண்டம் அஞ்சலிஉரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் தோழர். சிரில்ராஜ் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மாநில செயலாளர் தோழர். R. ராஜசேகர் தமது விளக்கவுரையில் சர்வதேச போர் சூழ்நிலைகளையும், அதனால் ஏற்படுகின்ற பொருளாதார நெருக்கடிகளையும், இதன் காரணமாக மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளையும், சவால்களையும், ஓய்வூதியர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் விளக்கி, நமது எதிர்கால கடமைகளாக மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி, அவற்றை செயல் படுத்த வேண்டும் என்று கூறினார். அதை தொடர்ந்து நமது சங்க ஆலோசகர் தோழர் CK நரசிம்மன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் தோழர்கள் கோதண்டம் மற்றும் சாய்ராம் ஆகியோர் தீர்மானங்களை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இறுதியில் மாவட்ட பொருளாளர் தோழர். மகாலிங்கம் அவர்கள் நன்றி கூறினார். பல்வேறு விவாதங்களோடும், ஆரோக்கியமான ஆலோசனைகளோடும் கூட்டம் நிறைவடைந்தது.
எடுக்கப்பட்ட முடிவுகள் :-
✳️ ஓய்வூதியர் சந்திப்பு இயக்கத்தை சிறப்பாக உடனடியாக நடத்துவது.
✳️ ஓய்வூதியர் முழக்கம் பத்திரிகையின் சந்தாவை அதிகரித்தல்.
✳️ உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தல்
✳️ பத்திரிகை நன்கொடை வசூலித்தல்
✳️உறுப்பினர்களிடம் ஆண்டு சந்தா நன்கொடை வசூலித்தல்
✳️நடக்க இருக்கின்ற இயக்கங்களிலும், போராட்டங்களிலும் அதிக தோழர்களை கலந்துகொள்ள செய்தல்.
✳️COC, NCCPA, FCPA மத்திய சங்கங்கள் விடுக்கின்ற அறைகூவல்களை சிறப்பாக செயல்படுத்துவது.
R சிரில்ரஜ்
மாவட்ட செயலாளர்
AIBDPA CGM O
சென்னை 600006.




0 Comments