அசத்தலாக அரங்கேறிய கோவை மாவட்ட மதுக்கரை பாலக்காடு கிளை மாநாடு
தோழர்களே !!
மதுரமாக நடந்து முடிந்த கோவை மாவட்ட மதுக்கரை பாலக்காடு கிளை மாநாடு பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு வெற்றி கண்ட கோவை மாவட்டத்தில் மூன்றாவது கிளை மாநாடு 29.9.26 அன்று பாலக்காடு K.G. போஸ் பவனில் சரியாக காலை பத்து மணிக்கு துவங்கியது
கிளை தலைவர் தோழர். C.ஆறுமுகம் தலைமையில் மூத்த தோழர். ராஜு அவர்கள் சங்க கொடி ஏற்றி வைக்க விண்ணதிரும் முழக்கங்களுடன் தியாகிகளின் நினைவுச் சின்னத்திற்கு மலர் தூவி மாநாடு துவங்கியது. தலைமை உரைக்குப் பின் தோழர் சுப்பிரமணியம் உதவி செயலாளர் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தி முடித்தார். கிளைச் செயலாளர் தோழர் சசிதரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்
மாவட்டச் செயலாளர் தோழர். A.குடியரசு DS தலைமட்ட சங்க செயல்பாடுகளும் இயக்கங்களும் இன்று மாவட்டச் சங்கத்தின் செயல்பாடுகள் பற்றி பதிவு செய்து தேர்வு செய்யப்படும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களை சொல்லி கிளை மாநாட்டை துவக்கி வைத்தார். கிளை மாநாட்டிற்கு130 தோழர்களுக்கு மேலாக 60 மகளிர் தோழர்கள் உட்பட குடும்பம், குடும்பமாக ஓய்வூதியர்கள் சங்கமித்த 3 வது கிளை மாநாடு வெற்றி மாநாடாக அமைந்தது. மாநிலச் செயலாளர் தோழர் R. ராஜசேகர் அவருக்கே உண்டான பாணியில் இயக்கங்களும், ஓய்வூதியர்களின் நிலைப்பாடும், தலமட்டச் சங்கங்கள் போராடும் விதம் பற்றி அழகாக எடுத்துரைத்து சிறப்புரை வழங்கினார்.
AIPRPA மாநில உதவித் தலைவர் தோழர். ரவீந்திரநாதன் வாழ்த்துரை வழங்கினார். கிளைச் செயலாளர் அறிக்கை சமர்ப்பிக்க கிளை பொருளாளர் நிதிநிலை சமர்ப்பிக்க பொதுக்குழு ஏக மனதாக ஏற்றுக் கொண்டது. கிளையின் முக்கிய நிகழ்ச்சியாக கிளை நிர்வாகிகள் தேர்வை மாவட்ட செயலாளர் நடத்தி முடித்தார். 17 தோழர்கள் கொண்ட புதிய கிளை நிர்வாகிகள் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டனர். முக்கிய நிர்வாகிகளாக தலைவர் C. ஆறுமுகம், செயலாளர் K. சசிதரன், பொருளாளர் ரவீந்திரன் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாநிலச் செயலாளர் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
பாலக்காடு மாவட்ட செயலாளர் தோழர் ராஜன் பாலக்காடு AIBDPA கிளை இருக்கும் தொடர்பு பற்றி பாராட்டி, தேர்வு செய்யப்பட்ட புதிய நிர்வாகிகளை வாழ்த்தி பேசி தனது கருத்துக்களை பதிவு செய்தார். இறுதியாக BSNLEU மாநில பொறுப்பாளர் தோழர் ரஞ்சித் குமார் வாழ்த்துரை வழங்கினார். மாநில சங்கத்திற்கு ரூபாய் 5000/- நன்கொடை மாவட்ட பொருளாளர் தோழர் N.P.ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டது. கிளை பொருளாளர் தோழர். ரவீந்திரன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். மன நிறைவான மதிய உணவுடன் தோழர்கள் கலைந்து சென்றனர்.
A.குடியரசு DS/AGS







0 Comments