Latest

10/recent/ticker-posts

புதிய அத்தியாயம் படைத்த சேலம் மாவட்ட ஆத்தூர் கிளை மாநாடு !

 புதிய அத்தியாயம் படைத்த சேலம் மாவட்ட ஆத்தூர் கிளை மாநாடு !






                புதிய முயற்சியாக, சேலம் மாவட்டத்தில் முதன் முறையாக, BSNLEU - AIBDPA - TNTCWU ஆத்தூர் கிளை சங்கங்கள், இணைந்த கிளை மாநாடு, 28.09.2026 அன்று ஆத்தூரில் சிறப்பாக நடைபெற்றது. BSNLEU சங்கத்தின் 12வது மாநாடு, AIBDPA சங்கத்தின் 3வது மாநாடு, TNTCWU சங்கத்தின் 8வது மாநாடு  என இணைந்த மாநாடு நடைபெற்றது. 

          மாநாட்டிற்கு CoC ஆத்தூர் கிளை தலைவர் தோழர். N. மூர்த்தி AIBDPA தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக, விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே, சங்க கொடியை, தோழியர். C. ராணி (BSNLEU) ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து, மாநாட்டு அரங்கில், தோழர் T. செல்வராஜூ (AIBDPA) அஞ்சலியுரை நிகழ்த்த, தோழர் G. R. வேல்விஜய், BSNLEU ஆத்தூர் கிளை செயலர் வரவேற்புரை வழங்கினார். ஆய்படு பொருள் ஏற்புக்குப்பின், மாறுபட்ட முயற்சியாக, மாநாட்டிற்கு வந்திருந்த தலைவர்களை, தோழர் பிரகாஷ் காரத் அவர்களின் "புத்தகங்கள் என் உற்ற துணையாய்" என்கிற நூலை வழங்கி, ஆத்தூர் கிளை வரவேற்றது.

            மாநாட்டை தோழர் M. சண்முகம், மாநில அமைப்பு செயலர், BSNLEU முறைப்படி துவக்கி வைத்து, துவக்கவுரை வழங்கினார். அவரை தொடர்ந்து தோழர் S.தமிழ் மணி, மாவட்ட செயலர் AIBDPA, தோழர் M. செல்வம் மாவட்ட செயலர், TNTCWU தோழர் E. கோபால், மாநில உதவி செயலர், AIBDPA ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். அதனை தொடர்ந்து, மூன்று சங்கங்களின் இணைந்த செயல்பாட்டு அறிக்கை, முழுவதுமாக வாசிக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரவு - செலவு அறிக்கை, தனி தனியாக சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்வும், ஏகமனதாக நடைபெற்றது. 

             தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளை, தோழர் R. ஸ்ரீனிவாசன், மாவட்ட தலைவர், BSNLEU, தோழர் S. அழகிரிசாமி, மாநில அமைப்பு செயலர், AIBDPA, தோழர் J. ஸ்ரீனிவாசராஜு, BSNLEU GM அலுவலக பொறுப்பு செயலர், தோழர் P. தங்கராஜு மாவட்ட பொருளர் AIBDPA, தோழர் P. A. ஆறுமுகம், மாவட்ட உதவி செயலர் AIBDPA ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

                  புதிய முயற்சியை ஊக்குவிக்கும் விதமாக, CoC அமைப்பின், அநேக முக்கிய தலைவர்கள், மாநாட்டில் கலந்து கொண்டது, பெருமைக்குரிய விஷயம். BSNLEU - AIBDPA - TNTCWU மூன்று சங்க, ஆத்தூர் கிளை தோழர்களும், திரளாக கலந்து கொண்டது நல்ல அம்சம். சுவையான சிற்றுண்டி, அமைதியான இடம், கொடிகள், தோரணங்கள், பயனுள்ள அறிக்கை என சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்த ஆத்தூர் கிளை சங்கங்களை மாவட்ட சங்கங்கள் மனதார பாராட்டுகிறது. 

BSNLEU கிளை சங்கத்திற்கு தோழர்கள் C. ராணி, G. R. வேல்விஜய், S. ராணி முறையே தலைவர், செயலர், பொருளராகவும், 

AIBDPA கிளை சங்கத்திற்கு தோழர்கள் A. ராஜேந்திரன், A. அருள்மணி, N. பிரகாசம் முறையே, தலைவர், செயலர், பொருளராகவும்

 TNTCWU கிளை சங்கத்திற்கு தோழர்கள் V. சண்முகம், A. சிவந்தன், R. சதீஷ் முறையே, தலைவர், செயலர், பொருளராகவும் கொண்ட நிர்வாகிகள் பட்டியல் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டது.

       TCS நிறுவனம் வழங்கும் சேவையில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு, BSNL வாடிக்கையாளர்களுக்கு, சிறந்த சேவை வழங்க வேண்டும், 01.01.2017 முதல் ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், சேலம் மாவட்டத்தில், BSNLMRS திட்டத்தில் புதிய மருத்துவமனைகள், OUTSOURCING முறை கைவிடப்பட்டு, வேலை நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களை, மீண்டும் பணிக்கு எடுத்து கொள்ள வேண்டும், LICE இலாகா பதவி உயர்விற்கு, எளிமையான போட்டி தேர்வு, அதிகாரிகளுக்கு இணையான, புதிய NEPP திட்டம், 20.11.2026 ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட,  நல்ல பல தீர்மானங்கள் மாநாட்டில், நிறைவேற்றப்பட்டது.

CoC ஆத்தூர் இணைச் செயலர் தோழர் A. சிவந்தன் நன்றி கூறி மாநாட்டை முடித்து வைத்தார்.

தோழமையுடன்,
S. தமிழ்மணி 
மாவட்ட செயலர்
AIBDPA

Post a Comment

0 Comments