கோவை மாவட்ட குறிச்சி கிளைக் கூட்டம்
தோழர்களே !!
08.09.2026 கோவை மாவட்ட குறிச்சி கிளைக் கூட்டம் தோழியர். சூரிய கலா சௌந்தரராஜன் அவர்கள் தலைமையில் 21 தோழர்கள் கலந்து கொண்ட கிளைக் கூட்டமாக நடைபெற்றது. பொறுப்பு செயலாளர் தோழர். லாரன்ஸ் அஞ்சலி நிகழ்ச்சியையும் மற்றும் வரவேற்புரையையும் நிகழ்த்தினார். தோழர். P. M. நாச்சிமுத்து COS & தோழியர். S.மகுடீஸ்வரி மாநில மகளிர் உப குழு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கிளை பிரச்சனைகள் சம்பந்தமாக தோழர்களிடம் கருத்து கேட்க்கப்பட்டது. தோழர்கள் கூறிய கிளைப் பிரச்சனைகள் வரவேற்கப்பட்டது. தோழர்கள் கூறிய பிரச்சனைகளுக்கு பதில் அளித்த மாவட்டச் செயலாளர் தோழர். A. குடியரசு நமது அகில இந்திய, மாநில, மாவட்ட சங்கம் கடந்த வந்த பாதை இனி கடந்து செல்லும் பாதை இயக்கங்கள் பற்றி எடுத்துக்கூறி வாழ்த்துரை வழங்கினார்.
வந்திருந்த தோழர்கள் மாநில சங்கத்திற்கு ₹200/-ம், சில தோழர்கள் 500/- வரையும் நிதி நன்கொடை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. தோழர்களின் நிதியளிப்பு பாராட்டுதலுக்குரியது. இறுதியாக தோழர். தண்டபாணி நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
A.குடியரசு DS/AGS.




0 Comments