Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற சேலம் மாவட்ட நாமக்கல் கிளையின் நான்காவது மாநாடு !!

தமிழகத்தின் மிகப்பெரிய AIBDPA  கிளைகளில் ஒன்றான நாமக்கல் கிளையின் நான்காவது மாநாடு







            26.8.2026 இன்று நாமக்கல்லில் AIBDPAவின் நான்காவது கிளை மாநாடு தோழர். R.ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. தேசியக் கொடியை தோழர். பழனிசாமி அவர்களும்,  AIBDPA சங்கக்கொடியை தோழர். P. ராமசாமி அவர்களும் எழுச்சியோடு ஏற்றி வைத்தபின் மாநாடு துவங்கியது.

          அஞ்சலி உரையை தோழர். பாலசுப்பிரமணியம் நடத்தினார். கிளைச் செயலாளர் தோழர். S. ராமசாமி அனைவரையும் வரவேற்றார். மூத்த தோழர். P. ராமசாமி துவக்க உரையையும், மாநில அமைப்புச் செயலர் தோழர். S. அழகிரிசாமி, மாவட்ட செயலாளர் தோழர். S.தமிழ்மணி ஆகியோர் சிறப்புரையையும் நிகழ்த்தினார்கள்.

             மாநாட்டை வாழ்த்தி தோழர். V.கோபால் மாவட்ட உதவி செயலாளர், தோழர். M.சண்முகம் மாநில அமைப்பு செயலாளர் BSNLEU, தோழர். P.தங்கராஜ் மாவட்ட பொருளாளர், தோழர். R.ரமேஷ் BSNLEU கிளைச் செயலாளர், AIBDPA கிளை செயலாளர்கள் தோழர். அங்குராஜ் (SMG),  தோழர். P.M.ராஜேந்திரன் (RSP),  தோழர். M.ராஜலிங்கம் (TCD), மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர். மகபூப்ஜான், V. பரந்தாமன் (TCD)  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

           ஆண்டறிக்கை வரவு செலவு சமர்ப்பிக்கப்பட்டு ஏற்கப்பட்ட பின்,  புதிய நிர்வாகிகள் தேர்வு ஏக மனதாக நடைபெற்றது. தோழர்கள் R. ராஜகோபால், S.ராமசாமி, K.M.செல்வராஜ் ஆகியோர் முறையே தலைவர் கிளைச் செயலர் பொருளாளர் ஆக தேர்வு செய்யப்பட்டனர். குடும்ப ஓய்வூதியர்கள் உட்பட என்பதுக்கும் மேற்பட்ட தோழர் தோழியர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்பித்தனர். 

 இறுதியாக தோழர் K.M.செல்வராஜு அவர்கள் நன்றி கூற மாநாடு நிறைவு பெற்றது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

தோழமையுள்ள 
S.தமிழ்மணி 
மாவட்ட செயலாளர் 
AIBDPA

Post a Comment

0 Comments