Latest

10/recent/ticker-posts

திருநெல்வேலி மாவட்டம் தென்காசி கிளை 3வது கிளை மாநாடு - 17-08-2026

திருநெல்வேலி  மாவட்டம் தென்காசி கிளை 3வது கிளை மாநாடு - 17-08-2026







 வணக்கம் தோழர்களே...!!!

                  நெல்லை மாவட்ட தென்காசி கிளையின் மூன்றாவது கிளை மாநாடு 17-08-2026  திங்கள் கிழமை  வர்த்தக சங்க கட்டிடம் தென்காசியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டிற்கு கிளை தலைவர் தோழர். R. ராமநாதன் தலைமை தாங்கினார். கிளை அமைப்பு செயலரும், மாவட்ட உதவி பொருளாளருமான தோழர். M. முருகேசன்   அஞ்சலி உரையாற்றினார். கிளைச் செயலர் தோழர். K. கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். 

      கிளைத் தலைவர் தோழர். R.ராமநாதன் தலைமையுரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலர் தோழர். எஸ். முத்துசாமி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில உதவி தலைவர் தோழர். எஸ். நடராஜா எழுச்சி மிகு சிறப்புரையாற்றினார். BSNLEU மாவட்ட செயலாளரும், தென்காசி கிளை உறுப்பினருமான தோழர். N. சூசைமரிய அந்தோணி வியாகப்பன் சிறப்புரையாற்றினார்.

      மாவட்ட பொருளாளர் தோழர். எஸ். சங்கரநாராயணன், மாவட்ட உதவி செயலர் தோழர். R. M.கிறிஸ்டோபர், அம்பாசமுத்திரம் கிளைச் செயலர் தோழர். S. P. கணேசன், சங்கரன்கோவில் கிளை செயலர் தோழர். D. கிறிஸ்டோபர் ராஜதுரை,   திருநெல்வேலி கிளைச் செயலாளர்  தோழர். S.செல்லத்துரை, வள்ளியூர் கிளைச் செயலர் தோழர். A.பிச்சுமணி, சங்கரன்கோவில் கிளை பொருளாளரும் மாவட்ட அமைப்பு செயலாளருமான தோழர். V.ராமநாதன் மற்றும் முன்னணி தோழர் பழனிசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

          மறைந்த தோழர். K. சுப்புராஜ் அவர்களின் மகன் திரு காசிநாதன் வந்து மாநாட்டில் கலந்து கொண்டு உதவிகள் செய்தது பாராட்டுக்குறியது. 07-08-2026 அன்று CoC சார்பில் நடைபெற்ற டெல்லி பேரணியில் கலந்து கொண்ட தோழர். S. வேலுசாமி மற்றும் தோழர் S. கணேசன் ஆகியோருக்கு பாராட்டுக்களும் புரட்சிகரமான வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

             சிறப்பான மதிய உணவிற்காக தோழர் அப்துல் ரஹீம் மற்றும் தோழர் K. பொன்ராஜ் தலா ரூபாய் 3000/= வழங்கினார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. ஆண்டறிக்கையும், வரவு செலவு கணக்கு அறிக்கையும்  ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமைப்பு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு நான்கு தோழர்கள் பேசியது சிறப்பம்சம். தோழர்களின் சந்தேகங்களுக்கு மாவட்ட செயலர் தோழர்.எஸ். முத்துசாமி விளக்கம் அளித்தார்.

           புதிய நிர்வாகிகள் தேர்தலை மாவட்ட செயலர் தோழர். S.முத்துசாமி நடத்தினார். கீழ்க்கண்ட தோழர்கள் புதிய நிர்வாகிகளாக ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர்: தோழர் R.ராமநாதன் 

செயலாளர் : தோழர் K.கணேசன் 

பொருளாளர் : தோழர் S. ராமசுப்பு

தோழர். A.அழகிரிசாமி தணிக்கையாளராக நியமனம் செய்யப்பட்டார்

      நிறைவாக.... கிளை பொருளாளர் தோழர் S.ராமசுப்பு நன்றி கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது. மாநாட்டில் 1 பெண் தோழியர் இசக்கியம்மாள் உள்பட சுமார் 50 தோழர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வந்திருந்த அனைத்து தோழர்களுக்கும் Gift பேக் வழங்கப் பட்டது. 

நன்றி தோழர்களே...!!!

தோழமை வாழ்த்துக்களுடன்,
 K.கணேசன்,
கிளைச் செயலாளர்,
தென்காசி கிளை,
திருநெல்வேலி தொலைத் தொடர்பு மாவட்டம்.
18-08-2026.

Post a Comment

0 Comments