Latest

10/recent/ticker-posts

FCPA–NCCPA தமிழ்நாடு - கவன ஈர்ப்பு நாள் போராட்டம் - 19.08.2026.

 FCPA–NCCPA தமிழ்நாடு

FCPA–NCCPA தமிழ்நாடு - கவன ஈர்ப்பு நாள் போராட்டம் - 19.08.2026.

கவன ஈர்ப்பு நாள் போராட்டம், கரை புரண்ட எழுச்சி...

தேசம் தழுவிய போராட்டம், திரண்டு எழுந்த  தமிழ்நாடு...19.8.2026























அன்புத் தோழர்களே,
        ஓய்வூதியர் உரிமைக்கான ஒற்றுமை, போராட்டம், தியாகம் ஆகியவற்றை முன்னிறுத்தி FCPA–NCCPA மத்திய அமைப்புகள் விடுத்த அறைகூவலின்படி, 19.08.2026 அன்று நடைபெற்ற நாடு தழுவிய கவன ஈர்ப்பு நாள் போராட்டம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

      இந்தப் போராட்டத்தை நாடு முழுவதும் ஒருங்கிணைத்து, முன்னெடுத்த FCPA–NCCPA மத்திய அமைப்புகளுக்கும், அதனை தமிழகத்தில் உறுதியுடன், எழுச்சியுடன் செயல்படுத்திய இணைப்பு அமைப்புகளுக்கும் எமது புரட்சிகர வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

👍தனி முத்திரை பதித்த தமிழ்நாடு

         தமிழகத்தில் இந்த இயக்கத்தை வெற்றிகரமாக்குவதற்கு அயராது உழைத்த மாவட்ட, கிளை அமைப்புகளின் நிர்வாகிகள், மாநிலச் சங்க நிர்வாகிகள்,  முன்னணித் தோழர்கள் மற்றும் அனைத்து அமைப்புகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

        25-க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றுள்ளன.
கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், புதுச்சேரி, சென்னை, திருச்சி,கரூர், தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, நாகர்கோவில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் சிறப்பாக நடைபெற்றுள்ளன.

உருக்கு போன்ற ஓய்வூதியர் ஒற்றுமை தமிழக போராட்டத்தின் சிறப்பம்சமாக வெளிப்பட்டுள்ளது.  FCPA–NCCPA அமைப்புகளின் எல்லைகளைத் தாண்டி பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஓய்வூதியர் அமைப்புகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தது பாராட்டுதலுக்குரியது.

அஞ்சல்-RMS, BSNL-DOT, ரயில்வே, கணக்குத் தணிக்கை, GST உள்ளிட்ட மத்திய அரசுத் துறைகளின் ஓய்வூதியர் அமைப்புகளுடன், வங்கி, இன்சூரன்ஸ், மாநில அரசு மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஓய்வூதியர் அமைப்புகளும் உற்சாகத்துடன் கலந்து கொண்டு நமக்கு உற்சாகத்தை அளித்துள்ளார்கள்.

இது தனித்தனி அமைப்புகளின் போராட்டம் அல்ல, ஓய்வூதியர் உரிமைகளைப் பாதுகாக்கும் ஒரு பரந்துபட்ட வர்க்க ஒற்றுமையின் வெளிப்பாடான போராட்டம்.

இன்றைய போராட்டம் அந்த ஒற்றுமையின் ஒரு முக்கியமான எடுத்துக்காட்டாக பரிணமித்துள்ளது. அனைத்து சங்கங்களும் ஒரே களத்தில் முழுமையாக இணைந்திருந்தால், இந்தப் போராட்டத்தின் வலிமை இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கும். இது நமக்கு ஒரு முக்கியமான படிப்பினையைத்  தந்திருக்கிறது.

வரும் காலங்களில் அமைப்புகளுக்கு இடையிலான ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவோம்!

கருத்து வேறுபாடுகளைக் கடந்து, உரிமைப் பிரச்சினைகளில் ஒன்றுபட்டுப்  போராடுவோம்!!

✌️அடுத்த கட்டப் போராட்டத்திற்கு ஆயத்தமாவோம்!!

👉அடுத்து நம்முன் அணிவகுக்கும்  கடமைகள்...

செப்டம்பர் 17, 18, 19 — மூன்று நாள் தொடர் போராட்டத்தை தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியாக மாற்றுவோம்.

செப்டம்பர் 17 – மதுரை மண்டலம்

செப்டம்பர் 18 – கோவை மற்றும் திருச்சி மண்டலங்கள்

செப்டம்பர் 19 – சென்னை மண்டலம்

இந்த மூன்று நாள் போராட்டங்களில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அந்தந்த மண்டலத்தில் நடைபெறும் போராட்டத்தில் பெருவாரியான அளவில் தோழர்கள் பங்கேற்று, ஓய்வூதியர் ஒற்றுமையின் மாபெரும் சக்தியை வெளிப்படுத்துவோம்!
அதனைத் தொடர்ந்து நடைபெறவுள்ள நவம்பர் 25 "டெல்லி சலோ" போராட்டத்தையும் வெற்றிகரமாக்குவோம்.

இன்று கவன ஈர்ப்பு நாள் —
🌟நாளை தொடர் போராட்டம் —
✌️இறுதியில் உரிமையை வென்றெடுக்கும் வரை போராட்டம்!!

✊ ஒன்றுபடுவோம்!
✊ போராடுவோம்!
✊ ஓய்வூதியர் உரிமைகளை வென்றெடுப்போம்!

போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்💪

வாழ்த்துக்களுடன்,
R. ராஜசேகர்
ஒருங்கிணைப்பாளர்
FCPA –தமிழ்நாடு.


🇻🇳 FCPA–NCCPA*
*TAMIL NADU*

*Call Attention Day Protest —*
*A Tidal Wave of Resurgence!*
*Nationwide Protest —*

*Tamil Nadu Rose in Strength and Unity!*
19.08.2026

Dear Comrades,
  In response to the call given by the FCPA–NCCPA Central Organisations, the nationwide Call Attention Day Protest held on 19 August 2026, highlighting the values of unity, struggle and sacrifice in defence of pensioners’ rights, has achieved a magnificent success.

We convey our revolutionary greetings and appreciation to the FCPA–NCCPA Central Organisations for coordinating and leading this movement across the country, and to all the constituent organisations in Tamil Nadu which implemented the programme with determination, enthusiasm and fighting spirit.

👍 Tamil Nadu Has Left Its Distinctive Imprint

We extend our heartfelt thanks and congratulations to the district and branch,District-and State-level leaders, frontline comrades and members of all organisations who worked tirelessly to make this movement a grand success in Tamil Nadu.

Today, Call Attention Day demonstrations were held with great enthusiasm at more than 25 centres.

Coimbatore, Pollachi, Tiruppur, Udumalpet, Erode, Salem, Namakkal, Vellore, Tiruvannamalai, Cuddalore, Puducherry, Chennai, Tiruchirappalli, karur, Thanjavur, Madurai, Dindigul, Virudhunagar, Tirunelveli, Thoothukudi, Kovilpatti, Nagercoil, Chengalpattu, Kanchipuram and several other places witnessed spirited demonstrations.

The steel-like unity of pensioners has emerged as a special feature of the Tamil Nadu movement. It is particularly commendable that pensioners’ organisations belonging to various sectors, beyond the organisational boundaries of FCPA–NCCPA, came together and raised a united voice.

Along with pensioners’ organisations of Postal–RMS, BSNL–DOT, Railways, Audit and Accounts, GST and other Central Government departments, pensioners’ organisations from the Banking, Insurance, State Government and various other state public sectors also participated enthusiastically and greatly strengthened our movement.

This was not merely a struggle of individual organisations.

It was an expression of broad-based class unity to protect and advance the rights of pensioners.

Today’s protest has emerged as an important example of that unity.
If all organisations had participated together on a fully united platform, the strength of this movement would have increased.

Let us further strengthen unity among all organisations in the days ahead!

Let us rise above differences of opinion and unite in struggle on issues concerning our rights!!

✌️ Let Us Prepare for the Next Phase of Struggle !

👉 Our Immediate Tasks
Let us transform the three-day continuous struggle from 17–19 September into a massive movement of pensioners across Tamil Nadu.

17 September – Madurai Region
18 September – Coimbatore and Tiruchirappalli Regions*
19 September – Chennai Region*

Let comrades from all districts participate in large numbers in the programmes organised in their respective regions and demonstrate the mighty strength of pensioners’ unity!

Thereafter, let us make the forthcoming “Delhi Chalo” programme on 25 November a grand success.
⭐ Today — Call Attention Day
🌟 Tomorrow — Continuous Struggle
✌️ Ultimately — Struggle until we win our rights !
✊ Let us unite!
✊ Let us struggle!
✊ Let us win and safeguard the rights of pensioners!
Revolutionary greetings to all comrades who participated in the struggle! 💪

With greetings,
R. Rajasekar
Convenor
FCPA–Tamil Nadu
19.8.26

Post a Comment

0 Comments