கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் மாதாந்திர கிளைக் கூட்டம்
![]() |
தோழர்களே !!
17.8.26 அன்று கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் மாதாந்திர கிளைக் கூட்டம் மூத்த தோழர். S. பொன்னுசாமி அவர்கள் தலைமையில் 32 தோழர்கள் கலந்து கொண்ட கிளைக் கூட்டமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப ஓய்வூதிய பெரும்பாலான மகளிர் தோழர்கள் கலந்து கொண்டது சிறப்பு அம்சம். தோழியர் விஜயா குடும்ப ஓய்வூதியர் அவர்களின் மகள் விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பொறுப்பேற்றதற்கு வந்திருந்த அத்தனை தோழர்களுக்கும் SKC வழங்கி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். கிளை பொருளாளர் தோழர். துரைசாமி அனைவரையும் வரவேற்று பேசினார். தோழர்கள் கூட்டம் துவங்குவதற்கு முன்பாகவே ₹ 200/- மாநில சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, வந்திருந்த தோழர்கள் கிளை பொருளாளரிடம் இன்முகத்துடன் நிதி வழங்கினார்கள்.
தோழர் சாகின் அஹம்மது BSNLEU மாவட்ட பொருளாளர் வாழ்த்துரை வழங்கினார். TNTCWU தோழர். பாபு ராதாகிருஷ்ணன் AGS டெல்லி பயணம் மற்றும் தொலைத்தொடர்பு கூட்டுறவு சங்கம் சம்பந்தமான டெல்லியில் நடந்த தகவல்களையும் வாழ்த்துக்களையும் கூறி பதிவு செய்தார். மாவட்டச் செயலாளர் தோழர். A.குடியரசு அகில இந்திய சங்க செயல்பாடுகள், மாநில, மாவட்ட சங்க செயல்பாடுகள் தற்போதைய போராட்ட வடிவங்களை எடுத்துக் கூறி வாழ்த்துரை பதிவு செய்தார்.
டெல்லி பேரணிக்கு கலந்து கொண்ட தோழர் பாபு ராதா கிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் தோழர் குடியரசு இருவருக்கும் கதர் ஆடை அணிவித்து கௌவரவித்தனர். இறுதியாக தோழர். பாட்ஷா நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்




0 Comments