Latest

10/recent/ticker-posts

NCCPA/ FCPA - ஒருங்கிணைப்பு க்குழு - தமிழ் மாநிலம்

 NCCPA/ FCPA - ஒருங்கிணைப்பு க்குழு - தமிழ் மாநிலம் 

இரு பெரும் பொறுப்புகளை வெற்றிகரமாக நிறைவேற்றிய NCCPA / FCPA கூட்டங்களின் தமிழ் மாநில வரவேற்புக் குழு !

NCCPA  தேசிய செயற்குழு சென்னை 18-07-2026 பொது அரங்கு

             சென்னையில் உள்ள மகாராஷ்டிரா பவனில் நடைபெற்ற NCCPA தேசிய செயற்குழுக் கூட்டம்,  18.7.26 அன்று காலை 10 மணிக்கு, மூத்த தலைவர் மற்றும் புரவலர் தோழர். V. A. N. நம்பூதிரி அவர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்த நிகழ்வுடன் தொடங்கியது. அதன் பின்னர் தியாகிகளுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. காலை 10.30 மணிக்கு பொது அரங்கு  துவங்கியது. தோழர்  வி. ஏ. என். நம்பூதிரி அவர்கள் தலைமை தாங்கினார். பொறுப்பு பொதுச் செயலாளர் தோழர் கே. ஜி. ஜெயராஜ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில்,  8வது மத்திய ஊதியக் குழுவிற்கு (CPC) 18 மற்றும் 9 கேள்வித் தொகுப்புகளாக சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களைப் பற்றி  விளக்கமளித்தார். இரண்டு கட்ட போராட்டங்களுக்குப் பிறகும் பென்சன் Validation சட்டத் திருத்தம், மற்றும் 8வது CPC-இன் Terms of Reference குறித்தும்  எந்த முன்னேற்றமும் இல்லாததால், மூன்றாவது கட்டப்  போராட்டத்தைத் தீர்மானிப்பது தேசிய செயற்குழுவின் கடமையாக உள்ளது என்று தெரிவித்தார்.

                 NCCPA தலைவர் மற்றும் NJCM ஊழியர் தரப்புச்  செயலாளர் தோழர்  சிவகோபால் மிஷ்ரா அவர்கள் பொது  அரங்கைத் தொடங்கி வைத்தார். 8வது CPC தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புதுடெல்லியில் CPCன் உறுப்பினர்கள் குழுவுடன் நடைபெற்ற இரு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் குறித்து விரிவாகப்  பேசினார். 8வது CPCன்  தலைவர் ஓய்வூதியத்  திருத்தம் குறித்து விவாதிக்க முடியாது என்று கூறியிருந்தாலும், அதை விவாதித்துத்  தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார். இல்லையெனில், பெரிய அளவிலான போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார். ஓய்வூதியர்களுக்கு மதம், சாதி எதுவும் இல்லை; அவர்களை வேறுபடுத்த முடியாது என்றும் வலியுறுத்தினார். அரசு தனியார்மயப்படுத்தலில் தீவிரமாக செயல்படுகிறது.  மோடி அரசு ஜனநாயகத்திற்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளது. இதற்கு எதிராகப் பரந்த ஒற்றுமையை உருவாக்கிப் போராட வேண்டும் என்றார்.

              NCCPA துணைச்  செயலாளர் மற்றும் AIPRPA பொதுச் செயலர் தோழர்  டி. கே. தேப்நாத், NCCPA செயல் தலைவர் தோழர். எஸ். கே. சர்மா, தோழர் ஏ. கே. கோஷ், DRPU தலைவர் தோழர் ஆர். இளங்கோவன், AIRRF தலைவர் தோழர் எஸ். ஸ்ரீதர் ஆகியோர் பொது அரங்கில் பேசினர். வரவேற்புக் குழுவின் செயலர் தோழர் ஆர். ராஜசேகர் அவர்கள் நன்றி கூறியதுடன் பிற்பகல் 1.30 மணிக்கு பொது அரங்கு  நிறைவடைந்தது.

🤝தமிழகத்தின் மற்றும் சென்னை தொலைபேசியின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கணிசமான பெண்கள் உட்பட 400-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டதால் அரங்கம் நிரம்பி வழிந்ததுடன் வெளியேயும் பல தோழர்கள் அமர்ந்திருந்தனர்.

🤝தோழர்கள் டி. பாலசுப்பிரமணியன், பி. மோகன், சி. கே. நரசிம்மன், ஆர். ராஜசேகர், கே. கோவிந்தராஜ், எஸ். மோகன், ஏ. முருகேசன், M. L. பெருமாள், என். பஞ்சாட்சரம் உள்ளிட்ட NCCPA / FCPA மாநில சங்க தலைவர்களின் தலைமையில் செயல்பட்ட வரவேற்புக் குழு, 18ஆம் தேதி NCCPA தேசிய செயற்குழு மற்றும் 19 ஜூலை 2026 அன்று  FCPA கூட்டத்தை சிறப்பாக நடத்த மிகச் சிறந்த ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

NCCPA தேசிய செயற்குழு :-

              மதியம் 2 மணிக்கு, தோழர் ஏ. கே. கோஷ் அவர்கள் தலைமையில் NCCPA வின் தேசிய செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. தோழர்  சிவகோபால் மிஷ்ரா அவர்கள் மேடையில் இருந்தார். பொறுப்பு பொதுச் செயலாளர் தோழர் கே. ஜி. ஜெயராஜ் அவர்கள் அமைப்புச் செயல்பாடுகள் குறித்து விளக்கி, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்மொழிந்தார்..

🌟விவாதத்தில் பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். 

BSNL / MTNL பென்ஷன் மாற்றம் குறித்து ஆழமான கருத்துக்கள்   முன் வைக்கப் பட்டன.

19-07-2026 அன்று நடைபெறும் FCPA கூட்டத்தில் அடுத்தகட்ட போராட்டங்கள்  இறுதி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

👌வரவேற்புக் குழுவின் சார்பாக தேசியச் செயற்குழுவில் கலந்துகொண்ட 48 நிர்வாகிகளுக்கும் வேலூர் மாவட்டம் வழங்கிய நினைவுப் பரிசுப் பை வழங்கப்பட்டது. 

👌அதனுடன் AIBDPA மத்திய சங்க சார்பில் தோழர்கள் நம்பூதிரி- ஜெயராஜ் இருவரும் இணைந்து எழுதிய Saga of struggles and achievements... (History of AIBDPA) புத்தகமும், 

AIBDPA தமிழ் மாநிலச் சங்கம் சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தோழர் பி. சம்பத் அவர்கள் எழுதிய The struggles and victories against Caste oppression in Tamil nadu புத்தகமும் நினைவுப் பரிசுகளாக வழங்கப்பட்டன. 

      அனைத்து NCCPA செயற்குழு  உறுப்பினர்களுக்கும் / FCPA நிர்வாகிகளுக்கும் Scribbling Pad, Pen, Face mask, Badge அடங்கிய File cover வரவேற்புக்குழு சார்பில் வழங்கப்பட்டதுடன், அனைவரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

FCPA தேசிய நிர்வாகிகள் கூட்டம் -19.7.2026 -இரண்டாம் நாள் நிகழ்வுகள்

                         19 ஜூலை 26 அன்று காலை ஒன்பது மணி அளவில் இரண்டாம் நாள் நிகழ்வுகள் தொடங்கின. முதலில்  AIPRPA சங்கத்தின் அமைப்பு தினம் கேக் வெட்டி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தோழர்கள் வி ஏ என் நம்பூதிரி, சிவகோபால் மிஸ்ரா, கே ஜி ஜெயராஜ், டி கே தேப்நாத் ஆகியோர் AIPRPA சங்கத்தின் வரலாற்றையும் போராட்ட குணத்தையும் விளக்கிப் பேசினார்கள். 

           பின்னர் FCPA அனைத்திந்திய நிர்வாகிகள் கூட்டம் துவங்கியது. கூட்டத்திற்கு தோழர் சிவகோபால்  மிஸ்ரா தலைமை தாங்கினார். தோழர் கே ஜி ஜெயராஜ் FCPA அமைப்பின் தேவைகளையும் நோக்கங்களையும் விவரித்து உரையாற்றினார்.  பின்னர் தோழர் நம்பூதிரி, D. பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் FCPA போராட்டங்கள்,   வேலிடேசன் சட்டத்திற்கு எதிரான நீதிமன்ற வழக்கு எனப் பல்வேறு  விவரங்களைப்  பற்றியும் விரிவாகப்  பேசினார்கள். 

அடுத்த கட்ட போராட்ட இயக்கங்கள் FCPA நிர்வாகிகள் கூட்டத்தில்   ஒருமனதாக இறுதி செய்யப்பட்டன.

FCPA தலைமை அதன் விவரங்களை விரைவில் வெளியிடும். அவை உடனடியாக பகிரப்படும். அவற்றை அமல்படுத்தும் பணியினை திட்டமிட்டு துவக்கிடுமாறு வேண்டுகிறோம்.

      FCPA கூட்ட நிகழ்ச்சியினிடையே அரங்க நிர்மாணம், தலைவர்களை அழைத்து வருதல், கொடியலங்காரம், தங்கும் அறை மேலாண்மை, உணவு மேற்பார்வை உள்ளிட்ட பல பணிகளை கச்சிதமாக மேற்கொண்டு சிறப்பாகப்  களப்பணியாற்றிய இருபது தோழர்களுக்கு, NCCPA,  FCPA மத்திய அமைப்புகளின் சார்பாக சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தலைவர்கள் அனைவரும்  வரவேற்பு குழுவின் பணிகளை வெகுவாகப் புகழ்ந்துரைத்தனர். 

கூட்டம் பிற்பகல் ஒரு மணி அளவில் மிகச் சிறப்பாக முடிவடைந்தது.

தோழர்களே NCCPA/ FCPA இரண்டு முக்கிய கூட்டங்களை நடத்தித் தரும் வாய்ப்பு தமிழ் மாநில NCCPA / FCPA  அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டது ஒரு அரிய சந்தர்ப்பம்.  இந்த பணியினை ஒரு சவாலாக ஏற்று அனைவரின் ஒத்துழைப்புடன் வரவேற்புக்குழு வெற்றிகரமாகச்  செய்து முடித்து இருக்கிறது. 

             பங்கு பெற்ற அனைத்துத்   தோழர்களும் மகிழும் வண்ணம் கூட்ட நிகழ்வுகள் நடந்து முடிந்தது சிறப்பு வாய்ந்ததாகும்.

           இரண்டு கூட்டங்களின் பிரம்மாண்ட வெற்றிக்கு இரண்டு மாத காலமாக கடும்  பணியாற்றிய, கடைசி நேரங்களில் இரவு பகல் பார்க்காமல் வீட்டுக்குக் கூடச்  செல்லாமல்,  மண்டபத்திலேயே தங்கியிருந்து அனைத்து பணிகளையும் மேற்கொண்டு, கடமையாற்றிய தமிழக NCCPA / FCPA தோழர்கள், 

            அனைவருக்கும் தமிழ் மாநில NCCPA , FCPA அமைப்புகளின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், நன்றியையும் உரித்தாக்கிக் கொள்கின்றோம்.  

இட்ட பணியினைச்  செவ்வனே செய்து முடித்து இருக்கின்றோம் என்ற திருப்தி நமக்கு ஏற்ப்பட்டிருக்கின்றது. 

இந்த இரு கூட்டங்களையும் நடத்திட பெரும் செலவு ஏற்பட்ட போதும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை தங்கள் அமைப்பின் சக்திக்கு மீறியதாக இருந்த போதும், சிரமங்களுக்கிடையே அதனை உடனடியாக வழங்கிய அனைத்து உறுப்பு சங்கங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி!  செலவின் சிறு பகுதியை ஏற்றுக் கொண்டு நன்கொடை வழங்கிய மாவட்ட சங்கங்களுக்கும் நன்றியினை உரித்தாக்குகின்றோம்.

இணைந்தே வருங்கால பணிகளை வெற்றிகரமாக முடிப்போம்! 

வாழ்த்துக்களுடன்,
வரவேற்புக் குழு !
NCCPA / FCPA கூட்டங்கள், சென்னை
20.7.26

Post a Comment

0 Comments