Latest

10/recent/ticker-posts

AIBDPA சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்ட முடிவுகள் !!

 AIBDPA சேலம் மாவட்டச் சங்க நிர்வாகிகள் கூட்ட முடிவுகள் 




           AIBDPA சேலம் மாவட்ட சங்க நிர்வாகிகள் கூட்டம் தோழர் சுதாகரன் DVP அவர்கள் தலைமையில் 8.7.2026 நேற்று நடைபெற்றது. அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு தோழர் E.கோபால் ACS அவர்கள் துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அஜெண்டா மீதான அறிமுக உரையாற்றினார். அஜண்டா மீதான விவாதம்  சிறப்பாக நடைபெற்றது.

                 தோழர் S. அழகிரிசாமி CoS அவர்களின் நிறைவுரை, தோழர் P. தங்கராஜு DT அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

 1) அனைத்து கிளை மாநாடுகளையும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிப்பது 

2) 1946,1960 வேலை நிறுத்த நினைவு கூறும் நிகழ்ச்சியை அனைத்து கிளைகளிலும் 11.7.2026 காலையில் நடத்துவது. 

நமது வழிகாட்டி தோழர் V.A.N.நம்பூதிரி* அவர்கள் பங்கேற்கும் ஆன்லைன் செமினாரில் மதியம் 3 மணிக்கு குறைந்தபட்சம் கிளைக்கு ஐந்து பேர் பங்கேற்பது. லிங்க் அனுப்பிவைக்கப்படும். 

3) 18/7, 29/7 ஆகிய தேதிகளில் நடைபெறும் NCCPA தேசிய செயற்குழு சென்னை, AIBDPA AIC வரவேற்பு குழு முடித்தல் கோவை கூட்டங்களில் முக்கிய தோழர்கள் பங்கேற்பது 

4) சேலம் FCPA சார்பில் நடைபெறும் சேலம் கருத்தரங்கில் நாம் அதிகமாக பங்கேற்பது

5) அகில இந்திய BSNL CoC முடிவுகளான ஆர்ப்பாட்டம், மூன்று நாள் தர்ணா, டெல்லிப்பேரணி (Aug 7th) ஆகியவற்றை அமுலாக்குவது 

 என முடிவுகள் எடுக்கப்பட்டது.

 மாவட்ட அளவிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட மேற்கண்ட முடிவுகளை அமுல் படுத்துமாறு அனைத்து கிளைகளையும் தோழமையோடு கேட்டுக்கொள்கிறோம். 


 வாழ்த்துக்களுடன் 
 S.தமிழ்மணி 
மாவட்ட செயலாளர் AIBDPA 
சேலம்

Post a Comment

0 Comments