Latest

10/recent/ticker-posts

மெடிக்கல் பில் மற்றும் அலவன்ஸ் பட்டுவாடா சம்மந்தமான நடவடிக்கை-- மாவட்டச் செயலாளர்களின் கவனத்திற்கு...!!

  AIBDPA TN

 மெடிக்கல் பில் மற்றும் அலவன்ஸ் பட்டுவாடா சம்மந்தமான நடவடிக்கை-- மாவட்டச் செயலாளர்களின் கவனத்திற்கு...!! 


தோழர்களே, 

                ஜூன் மாத இறுதியில் மெடிக்கல் பில் மற்றும் அலவன்ஸ்  ஓய்வூதியர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. 

              இதில் பல மாவட்டங்களில் பெரும்பாலான ஓய்வூதியர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகத்  தகவல்கள் வருகின்றன. 

          எனினும் ஒரு சில மாவட்டங்களில் இதில் சில குறைபாடுகள்  உள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

        ஒரு சில மாவட்டங்களில் மெடிக்கல் பில் மற்றும் அலவன்ஸ் தொகை ERPயில் அப்டேட் செய்யப்படவில்லை. 

      Update  செய்யப்பட்டிருந்தாலும் சில மாவட்டங்களில் தொகை பட்டுவாடா ஆகவில்லை. 

         ஆகவே மாவட்டச் செயலாளர்கள் இது சம்பந்தமான ஒரு முழுமையான அறிக்கையை மாநிலச்  சங்கத்திற்கு  உடனடியாக அனுப்பிவைக்க  வேண்டுகிறோம். 

        தொகை கிடைக்காத தோழர்களுக்கு, ERPல் கடைசியாக அப்டேட் செய்யப்பட்ட  Document எண்,  தேதி, தொகை, இவற்றையும், எத்தனை தோழர்களுக்கு தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்று விவரங்களையும்  GM அலுவலகங்களில் இருந்து சேகரித்து அனுப்பவும். 

     ERPல் அப்டேட் செய்யப்படாத தோழர்களின்  விவரங்களை நாம் மாநில நிர்வாகத்திடமும், ERPல் அப்டேட் செய்யப்பட்டு பணம் பட்டுவாடா ஆகாதவர்களுக்கு   மத்திய சங்கத்திடமும்  பிரச்சினையைக்  கொண்டு செல்லலாம்.

           இது தோழர்களின் மெடிக்கல் பில், அலவன்ஸ்  பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும். ஆகவே மாவட்ட சங்கங்கள் இது சம்பந்தமாக உடனடியாக ஒரு எழுத்துப்பூர்வமான அறிக்கையினை மாநிலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென   தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். 


தோழமை வாழ்த்துக்களுடன்,  
R.ராஜசேகர் 
மாநிலச் செயலாளர்
8.7.26

Post a Comment

0 Comments