AIBDPA TN - மாநிலச் சங்க மையக் கூட்டம் - 05-07-2026
தோழர்களே,
நமது AIBDPA தமிழ் மாநிலச் சங்கத்தின் மாநில மையக் கூட்டம் Whatsapp ஆன்லைன் மூலமாக 05-07-2026 அன்று மாலை 07-00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் தோழர் C.ஞானசேகரன், மாநிலச் செயலாளர் தோழர் R.ராஜசேகர் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் S மோகன் தாஸ், அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் பெர்லின் கனகராஜ், மாநிலப் பொருளாளர் தோழர் A இளங்கோவன் மாநில அமைப்பு செயலாளர் தோழர் ஆரோக்கிய நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விவாதங்களுக்குப் பிறகு, எடுக்கப்பட்ட முடிவுகள் :-
👉1. ஜூலை 11, 1946, மற்றும் 1960 இல் நடந்த மாபெரும் அகில இந்தியப் பொது வேலை நிறுத்தத்தை நினைவு கூரும் வகையில், NCCPAவின் சார்பில் அழைப்பு விடுத்ததின் அடிப்படையில், இந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி அன்று மாநிலத்தின் அனைத்து மட்டங்களிலும் போராட்ட நினைவு தினமாக அனுசரிப்பது.
a) அதனையொட்டி தமிழகத்தின் அனைத்து மாவட்ட, கிளை மட்டங்களிலும் நமது சங்கக் கொடியேற்றுவது.
b) 11.7.26 அன்று பிற்பகல் 03-00 மணிக்கு இணையவழி மூலமாக ஒரு சிறப்புக் கருத்தரங்கம் நடத்துவது.
⭐1960 வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டவர் என்ற அடிப்படையில் நமது மூத்த தோழரும், நமது சங்க நிறுவனருமான தோழர் VAN நம்பூதிரி அவர்களை சிறப்பு பேச்சாளராக் கருத்தரங்கத்தில் உரையாற்ற அழைப்பது.
🌟வரலாற்று சிறப்புமிக்க 1960 போராட்டத்தில் பங்கேற்ற, மூத்த போராட்ட வீராங்கனை தோழியர் விமலா ராவ் அவர்களை அழைத்து, அவர்களின் போராட்ட அனுபவங்களை பகிர்ந்துகொள்ளச் செய்து அவரை கௌரவிப்பது.
⭐அந்தக் கருத்தரங்கத்தில் இணைய வழியில் பங்குகொள்ள நம் தோழர்களை பெருமளவில் திரட்டுவது, எனவும் முடிவு செய்யப்பட்டது.
👉 2. ஜூலை 18 அன்று
சென்னையில் நடைபெற இருக்கும் NCCPA, FCPA பொது அரங்கத்தில் அனைத்து மாவட்ட செயலர்கள், மாநில சங்க நிர்வாகிகள் மற்றும் முன்னணித் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அருகாமையில் உள்ள மாவட்டங்களில் இருந்து கணிசமான எண்ணிக்கையில் தோழர்கள் கலந்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கான பயண ஏற்பாடுகளை உடனடியாக செய்து கொள்ள வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
⭐தொலை தூரத்திலிருந்து வரும் தோழர்களுக்கான காலை குளிப்பதற்காக ஏற்பாடு, மதிய உணவு ஆகியவை ஏற்பாடு செய்யப்படும்.
⭐இந்தப் பொது அரங்க செலவினங்களுக்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வேண்டுகோள் வைக்கப்பட்ட சிறு நன்கொடைத் தொகையை உடனடியாக 6.7.26 அன்று மாலைக்குள் வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
👉3. AIBDPA மாநில மையத்தை விரிவு படுத்தும் அடிப்படையில், நமது மத்திய சங்க நிர்வாகிகள் தோழர்கள் N.குப்புசாமி மற்றும் A.குடியரசு ஆகியோரை மாநில மையத்தில் இணைத்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது
👉4. வேலூர் மாவட்ட சங்கம் NCCPA, FCPA மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு நினைவுப் பரிசாக 50 பைகளை நன்கொடையாக வழங்க இருப்பதால் வேலூர் மாவட்ட சங்கத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
R ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
AIBDPA TN
05-07-2026.
0 Comments