சிறப்பாக நடைபெற்ற தூடி மாவட்ட கோவில்பட்டி கிளை கூட்டம்.
தோழர்களுக்கு வணக்கம்.
தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிளை பொதுக்குழு கூட்டம் 06.07.2026 திங்கட்கிழமை அன்று காலை 11 மணிக்கு கோவில்பட்டி மந்திதோப்பு ரோட்டில் உள்ள பாரதி இல்லத்தில் (புனித ஓம் CBSE பள்ளிக்கூடத்திற்கு எதிர்ப்புறம்) வைத்து கிளைத் தலைவர் தோழர். R. மகேந்திரமணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிநிரல் ஒப்புதலுக்கு பின் மாவட்ட உதவிச் செயலர் தோழர். K. சுப்பையா அஞ்சலி உரை நிகழ்த்தினார். கிளைச் செயலர் தோழர். S. ஆறுமுகம் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட உதவிச் செயலர் தோழர். S. கோலப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட உதவித் தலைவர் தோழர். P. முத்துராமலிங்கம் வாழ்த்துரை வழங்கினார்.
அகில இந்திய உதவி தலைவர் தோழர். எஸ். மோகன்தாஸ் சிறப்பு உரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் தோழர். பி. ராமர் கலந்து கொண்ட தோழர்களின் கேள்விகளுக்கு பதில் கூறியதோடு துவக்க உரையாற்றினார்.
கிளை மாநாட்டை விரைவில் நடத்துவது என்றும், விடுபட்ட தோழர்களின் மருத்துவ படி மற்றும் பில்களை விரைந்து பெற்றிட மாவட்ட சங்கம் ஏற்பாடு செய்யவும் கேட்டு தீர்மானிக்கப்பட்டது. 35க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக கிளை பொருளாளர் தோழர். கிருஷ்ணன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
தோழமையுள்ள
எஸ் ஆறுமுகம்
கிளைச் செயலாளர் AIBDPA
கோவில்பட்டி கிளை
05.07.26.


0 Comments