கோவை மாவட்ட மதுக்கரை பாலக்காடு கிளை கூட்டம்
தோழர்களே !!
08.06.26 அன்று கோவை மாவட்ட மதுக்கரை பாலக்காடு கிளை கூட்டம் தோழர் C. ஆறுமுகம் கிளைத் தலைவர் அவர்கள் தலைமையில் 33 தோர்கள் கலந்துகொண்ட கிளைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தோழர் முரளி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார். தொடர்ந்து கிளை செயலாளர் தோழர் சுசீதரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கிளை பிரச்சனைகள் தோழர்களிடம் கேட்கப்பட்டது. வந்திருந்த பிரச்சனைகளை மாவட்ட செயலாளர் எப்படி தீர்வு கண்டுள்ளோம் என்ற பதிலை கொடுத்தும், இன்றைய காலகட்டத்தில் ஓய்வூதியரின் நிலை பற்றி எடுத்துரைத்தார். பொள்ளாச்சி அலுவலகத்தில் பணி நிறைவு செய்த தோழர் ஜெயபால் அவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதால் அந்தக் கூட்டத்தில் அவரை சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டார். கிளைச் சங்கத்தில் தீர்மானமாக அனேகமாக செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் நடைபெறும் கிளை மாநாட்டிற்கு குடும்பமாக இணைந்து (கணவன் -மனைவி /குடும்ப ஓய்வூதியரை) இணைத்து நடத்துவது எனவும் Rs.1000/- நன்கொடை கொடுப்பதாக பொதுக்குழுவில் ஏக மனதான கருத்துக்கள் பதிவாகியது. இறுதியாக தோழர் ரவீந்திரன் கிளை பொருளாளர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
A.குடியரசு, மாவட்ட செயலாளர், கோவை மாவட்டம்.




0 Comments