AIBDPA TN
BSNLEU 25ம் - ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம் - IMA அரங்கம், மதுரை.
24-06-2026 காலை 10 மணி முதல்...
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் AIBDPA தோழர்கள் திரளாகப் பங்கேற்று முத்திரை பதிப்போம்...!!!
தோழர்களே,
அரசாங்கத்தின் பங்கு விற்பனை /தனியார்மய சதிகளை முறியடித்து, BSNLஐ 100% அரசு நிறுவனமாகப் பாதுகாத்து வரும் சங்கம்.
ஊழியர்கள் / அதிகாரிகளின் சங்கங்களை ஒன்றிணைத்து மகத்தான ஒற்றுமையை உருவாக்கிய சங்கம்.
👉தொடர்ச்சியாக 8 முறை அங்கீகாரத் தேர்தல்களில் வென்று வரலாறு படைத்த சங்கம்.
👉 நட்டக் கணக்கு காட்டப்படும் பொதுத்துறை நிறுவனத்திலும் ஊதிய மாற்ற ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு சாதனை படைத்த சங்கம்.
👉 தாய்ச் சங்கமாக நம்மையெல்லாம் உருவாக்கி வார்த்தெடுத்த சங்கம்
இத்தகைய பல சாதனைகளைப் படைத்த சங்கமான BSNL ஊழியர் சங்கம் தனது 25வது வெள்ளி விழா ஆண்டினைக் கொண்டாடி வருகின்றது.
வெள்ளிவிழாவை ஒட்டி தமிழகத்தில் மதுரையில் 24.6.26 அன்று காலை 10 மணி முதல், மதுரை மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள IMA ஹாலில், ஒரு நாள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில், BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் அனிமேஷ் மித்ரா மற்றும் முன்னாள் பொதுச் செயலாளர் மற்றும் துணைத் தலைவர் தோழர் P. அபிமன்யு ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக, கடந்த காலங்களில், BSNL ஊழியர் சங்கத்தின் மாநிலச் சங்க நிர்வாகிகளாகவும், வழிகாட்டும் மூத்த தலைவர்களாகவும் செயல்பட்டு BSNL ஊழியர் சங்கத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய தோழர்களைக் கௌரவிக்கின்ற நிகழ்வும் நடைபெற உள்ளது.
இந்த கெளரவிக்கும் நிகழ்ச்சிக்கு AIBDPA சங்கத் தோழர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அழைக்கப்பட்டுள்ளனர்.
BSNL ஊழியர் சங்கத்தின் இந்த வெள்ளி விழா நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் வகையில், நமது AIBDPA சங்கத்தின் மாநிலச் நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகள், கிளைச் சங்க நிர்வாகிகள், முன்னணித் தோழர்கள், அனைவரும், பெருந்திரளாய்க் கலந்து கொண்டு நிகழ்சியினை வெற்றியடையச் செய்ய வேண்டும்.
மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டத் தோழர்கள் அதிக எண்ணிக்கையிலும், பிற தொலைதூர மாவட்டத் தோழர்கள் கணிசமான எண்ணிக்கையிலும் தங்களது பங்களிப்பைச் செலுத்தும் வகையிலும் கலந்து கொள்ள வேண்டுமென தமிழ் மாநில AIBDPA சங்கம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.
R.ராஜசேகர்
மாநில செயலர்
AIBDPA TN
17.6.26
0 Comments