Latest

10/recent/ticker-posts

வேலை நிறுத்த உரிமையை நிலைநாட்டியது சர்வதேச நீதிமன்றம் - Com.S.மோகன்தாஸ், CHQ VP.

 வேலை நிறுத்த உரிமையை நிலைநாட்டியது சர்வதேச நீதிமன்றம் -Com.S.மோகன்தாஸ், CHQ VP.

+++++++++++++++++++++++++

                  சர்வதேச தொழிலாளர் அமைப்பின் ( ILO) வேலை நிறுத்த உரிமை குறித்த விதி 87 மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பல அரசாங்கங்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்கள், அதற்கு துணை போகும் சில தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு சர்வதேச நீதிமன்றத்தில் (International Court of Justice at The Hague) ஆலோசனை கூற கோரும் மனு ஒன்று தாக்கல் செய்தது. 

          இந்த விசாரணையில் உலக தொழிற்சங்க சம்மேளனம் ( WFTU) தன்னை இணைத்துக் கொண்டு விரிவாக வாதாடியது. 

    தற்போது நீதிமன்றம் தனது ஆலோசனையை இறுதி படுத்தியுள்ளது. 

             வேலை நிறுத்த உரிமையை நிலைநாட்டும் ஆலோசனை பத்துக்கு நான்கு என்ற பெரும்பான்மை அடிப்படையில் நீதிமன்றம் வழங்கி உள்ளது. 

                வேலை நிறுத்த உரிமையை பறிக்க தொழிற்சாலை நிர்வாகம் முதல் சர்வதேச அமைப்புகள் வரை திட்டமிட்டு முயற்சி செய்யக் கூடிய இந்த காலத்தில் தொழிற்சங்க இயக்கம் மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டி உள்ளது.

Post a Comment

0 Comments