Latest

10/recent/ticker-posts

AIBDPA TN ....சங்கங்களின் வெற்றி..!!!!

  AIBDPA TN* ....சங்கங்களின் வெற்றி..!!!

வந்த அரசாணையில் இடியாப்ப சிக்கல்.‌!!! 


ஆங்கில அறிவை சிலர் எழுத்தில் காண்பிக்க விரும்பி இறுதியில் ஒன்றும் புரியாமல் குழப்பத்தில் முடிப்பார்கள். முடித்தார்கள். 

அப்படி வந்த தேவையில்லாத ஆணிதான் அந்த ஐந்தாவது பத்தி. 

அதைப்பற்றி நிறைய எழுதித் தள்ளி விட்டோம்.

அகவிலைப்படி உயர்வு பற்றிய அரசாணையில் வந்தது மாற்றம். 

அது குற்றம். 

தெளிவு படுத்த மாதங்கள் ஓடின. 

தெளிவானவர்கள் ஓய்வூதியர்கள். 

எவ்வளவோ வெற்றியைக் குவித்தார்கள். 

விட்டு விடுவார்களா இதை !! 

அநியாயம் என தெரிந்த பிறகும் போராடாமல் இருக்க, இயங்க இயலுமா....!!

தொடர் போராட்டங்கள். ஆர்பாட்டங்கள். 

தர்ணாக்கள். வலைப்பதிவுகள். 

வசமாகின அரசாங்க துறைகள். 

குளறுபடிகள் தகர்க்கப்பட்டன. வருங்காலத்து  தவறுகளும் தவிர்க்கப்பட்டன. 

ஓய்வூதிய சங்கங்களின் தலைகள் நிமிர்ந்தன. 

ஐந்தாம் படையான 

ஐந்தாம் பத்தி, 

பத்திக் கொண்டது. 

அரசாங்கம் விளங்கிக் கொண்டது. 

விலக்கிக் கொண்டது.

போராட்ட களத்தில் நாம் எடுக்கும் ஆயுதத்தை தீர்மானிப்பவன் நம் எதிரியே. 

ஊதித் தள்ளி விட்டோம். அவர்களையும் உதற வைத்து விட்டோம்.

நல்ல செய்திகள் வருகின்றன. 

அங்கு அகவிலைப்படி உயர்வு கிட்டியது. 

இங்கும் விரைவில் வர முடிவு எட்டியது. 

நம் களங்கள் வேண்டுமானால் மாறலாம்.

போராட்டம் மாறுமா.....?

கோடி கைகள் 

நிறைவேற்றும் 

நம் கோரிக்கைகளை.!!!


கவிதையாக.....

Com.Alphones

AIBDPA

Coimbatore

21.5.26

Post a Comment

0 Comments