Latest

10/recent/ticker-posts

பொங்கி எழுந்த ஓய்வூதியர்களின் போர் முழக்கம்....

  AIBDPA TN பொங்கி எழுந்த ஓய்வூதியர்களின் போர் முழக்கம்....

BSNL MTNL ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சார்பில் நாடு முழுவதும் 20.5.26 அன்று நடைபெற்ற எழுச்சி மிகு தர்ணாப் போராட்டம்...!!!






















தோழர்களே, 

          1.1.2026 முதல் நிலுவையில் உள்ள IDAவினை வழங்கத் தாமதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, BSNL MTNLலில் உள்ள அனைத்து ஓய்வூதியர் சங்கங்களும் இணைந்து அழைப்பு விடுத்த நாடு தழுவிய தர்ணா போராட்டம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 20.5.26 அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. 

           ஒவ்வொரு மாவட்டத்திலும் ஓய்வூதியர்கள் நூற்றுக்கணக்கில் உற்சாகத்துடன்  கலந்து கொண்டிருக்கிறார்கள்.  தமிழகத்தில் நிலவிவரும் கொளுத்தும் கோடை வெய்யிலையும் பொருட்படுத்தாமல் ஓய்வூதியர்கள் இதில் கலந்து கொண்டது என்பது பாராட்டுக்குரியது.

            AUAB சார்பாக நடைபெற்ற மனிதச்  சங்கிலி இயக்கமும் இந்தப் போராட்டத்திற்கு வலுச் சேர்த்துள்ளது.

            பல்வேறு கருத்தோட்டங்களைக்  கொண்ட ஓய்வூதிய சங்கங்கள் ஒன்றுபட்டு நடத்திய இந்த போராட்டங்களின்  விளைவாக அரசு முடக்க நினைத்த பஞ்சப்படி நிலுவையை  ஏப்ரல் மாதம் முதல் நாம் பெற்றிருக்கிறோம். 

              CCA அலுவலகமும் ஏப்ரல் மாதத்திற்கான 5.1 சத IDA நிலுவைத் தொகையினையும், மேலும் மே மாத ஓய்வூதியத்தில் அதனை இணைப்பதற்கும் இசைந்துள்ளனர்.  

          1.1.26 முதல் பெற வேண்டிய  3.5 சதவிகித பஞ்சப் படியை பெறுவதுதான் தற்போது நம் முன் உள்ள கோரிக்கையாகும்.

             தோழர்களே, ஓய்வூதியர்கள் ஒன்றுபட்டு நின்றார்கள் என்றால் அரசாங்கத்தின் கொள்கைகளை முறியடிக்க முடியும் என்பதற்கு நம்முடைய கடந்த கால போராட்டங்கள் முன்னுதாரணமாகத் திகழ்கின்றன.  அதனடிப்படையில் 

        BSNL MTNL ஓய்வூதியர் சங்கங்களின்  கூட்டமைப்பு அறைகூவல் விடுக்கும்  அனைத்து  இயக்கங்களிலும் நாம் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம். 

              இந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக மாவட்ட மட்டங்களில் நடவடிக்கை எடுத்த மத்திய சங்க நிர்வாகிகள், மாநிலச் சங்க நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், முன்னணித் தோழர்கள் அத்துணை பேருக்கும் தமிழ் மாநில சங்கத்தின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்களையும், புரட்சிகர வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

       இதே ஒற்றுமையை குலையாமல் வலுப்படுத்தி, ஓய்வூதிய மாற்றத்துக்கான போராட்டங்களிலும், 

பென்ஷன் வேலிடேஷன் சட்ட  எதிர்ப்பு போராட்டத்திலும் நாம் இணைந்து போராடி வெற்றி காண்போம் ...

இறுதி வெற்றி நமதே!!

Breaking news :-





            நம் போராட்டத்தின் வீச்சு இன்று 21.5.26 காலை DOT நிர்வாகம் ஜனவரி மாதம் முதல் தர வேண்டிய 3.5% DA க்கான உத்தரவினை வெளியிட்டிருக்கிறது. 

இது நமது ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். 

கொண்டாடுவோம் 👍வெற்றியை கொண்டாடுவோம். 

வலுப்படுத்துவோம் !!

போராட்ட ஒற்றுமையை வலுப்படுத்துவோம் !!!. 


தோழமை  வாழ்த்துக்களுடன், 
R ராஜசேகர் 
மாநிலச் செயலாளர் AIBDPA தமிழ்நாடு.
21.5.26

Post a Comment

0 Comments