Latest

10/recent/ticker-posts

LIC மற்றும் BSNL அதிகாரிகளுடன் மாநிலச் சங்கத்தின் சந்திப்பு 15.4.2026

AIBDPA தமிழ் மாநிலம் 
LIC மற்றும் BSNL அதிகாரிகளுடன் மாநிலச் சங்கத்தின் சந்திப்பு 15 4 2026


தோழர்களே,

           மாநிலச் சங்கத்தின் சார்பில் 15-4-26 அன்று LIC நிறுவனத்தின் கணக்கு அதிகாரி, BSNL CGM அலுவலகத்தில் GM HR, மற்றும் CAO  மெடிக்கல் பில்ஸ் ஆகியோரைச் சந்தித்து ஓய்வூதியர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.  இந்தச் சந்திப்புகளின் போது மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலர் தோழர் R ராஜசேகர், மாநில அமைப்பு செயலாளர்கள் தோழர்கள் A.ஆரோக்கியநாதன், முகமது ஜாஃபர் மற்றும் R.சீனுவாச ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

1) LIC கணக்கு அதிகாரி திருமதி ஸ்ரீவித்யா அவர்களுடன் சந்திப்பு 


BSNL நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்ற 30 தோழர்களுக்கு குரூப் இன்சியூரன்ஸ் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.  கோவை (27) மதுரை(1) தேனி (2), ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட பிரச்சனைகளில் 21 பிரச்சனைகள் LIC அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன.  மீதமுள்ள பிரச்சனைகள் LIC  அலுவலகத்திற்கு வரவில்லை.  பெறப்பட்டுள்ள பிரச்சனைகள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் இன்சியூரன்ஸ் தொகை விடுவிக்கப்படும்.

2) GM HR, திரு துளசிராமன் அவர்களுடன் சந்திப்பு.

       நீண்ட காலமாக திருச்சி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குடும்ப ஓய்வூதியர்களுக்கு அனுமதிக்கப்பட வேண்டிய மருத்துவ  ஆப்ஷன் குறித்து விவாதிக்கப்பட்டது.  மாநில நிர்வாகம் கார்ப்பரேட் அலுவலகத்திற்கு இது குறித்து எழுதிய கடிதத்திற்கு எதிர்மறையான பதில் வந்திருப்பதாகக் கூறினார்.  கடிதத்தின் நகல் கேட்கப்பட்டுள்ளது.  நகல் பெற்ற பிறகு மத்திய சங்கத்தின் மூலம் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். 

3) முதன்மைக் கணக்கு அதிகாரி திரு புகழேந்தி அவர்களுடன் சந்திப்பு 

               பல்வேறு மாவட்டங்களில் நிலுவையில் உள்ள மெடிக்கல் பில்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.  அவைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அண்மைக் காலமாக மெடிக்கல் பில்கள் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.  மாவட்டச் சங்கங்கள் மாவட்ட மட்டத்திலும் இவற்றை கண்காணிக்க வேண்டும்.

தோழமை வாழ்த்துக்களுடன், 
R ராஜசேகர் மாநிலச் செயலாளர் 
15 4 2026

Post a Comment

0 Comments