AIBDPA -தமிழ் மாநிலம்.*
தமிழக BSNL CGM திரு. இளந்திரை அவர்களுடன் மரியாதை நிமித்தம் சந்திப்பு -18 4 26.
சுற்றறிக்கை 6/2026
தோழர்களே,
தமிழக BSNLன் CGMஆக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திரு. இளந்திரை அவர்களை 18-4-26 அன்று மாநிலச் சங்க நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். அவருக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மாநிலச் சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலாளர் தோழர். R. ராஜசேகர், மாநில அமைப்புச் செயலாளர்கள் தோழர்கள் A. ஆரோக்கியநாதன், தோழர். முகமது ஜாபர் மற்றும் தோழர். சீனிவாச ராகவன் ஆகியோர் பங்கேற்றனர். நிர்வாகத்தின் தரப்பில் GM HR திரு. துளசிராமன், DGM HR திருமதி திவ்யா, AGM அட்மின் திருமதி ஷீனா தாமஸ், SDE SR திருமதி ஜனட் ஃபிளாரன்ஸ், முதலானோர் உடன் இருந்தனர்.
ஓராண்டு கால இடைவெளிக்குப் பிறகு CGM அவர்களை சந்தித்து, ஓய்வூதியர்களின் பிரச்சினைகளை விவாதிக்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது. நமது தமிழ் மாநிலச் சங்கம் இந்த வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டது.
தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள ஓய்வூதியர் பிரச்சினைகளை கடிதமாகக் கொடுத்து விவாதித்தோம்.
*விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளும், நிர்வாகத்தின் நிலைபாடும்.*
*1) திருச்சி மாவட்டத்தில் குடும்ப ஓய்வூதியர்களுக்கு மெடிக்கல் ஆப்ஷன்* மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பினை பரிசீலிப்பதாக CGM அவர்கள் உறுதியளித்தார்.
*2) மாவட்டங்களில் மெடிக்கல் அதாலத்துகள் நடத்துவது*
2023, 2024 ஆகிய ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற மெடிக்கல் அதாலத்துகள் மூலம் ஏராளமான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டதை எடுத்துரைத்தோம். இது குறித்து ஆய்வு செய்ய GM HR அவர்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது.
*3) கோயம்புத்தூர் கணக்கு அதிகாரிகள்*
தோழர்கள் M ராஜா, K விஜயலட்சுமி,
S ராஜேந்திரன், C லில்லிபேபி, ஜாக்குலின், ஆகிய ஓய்வு பெற்ற கணக்கு அதிகாரிகளுக்கு 1.4.2004 முதல் 31.12.2009 வரை வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்து ஆழமான விவாதத்தை முன் வைத்தோம். அவர்களுக்கு இன்கிரிமெண்ட் வழங்கப்பட்டு, ஓய்வூதியமும் மாற்றப்பட்டுள்ளது. எனினும், நிலுவைத் தொகை வழங்கப்படாததை CGM அவர்களின் கவனத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது. இதனை பரிசீலிக்கக் கூறி GM HR அவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
*4) சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கேட்ராக்ட் கண் அறுவைச் சிகிச்சை* தொடர்பான குழப்பங்களை CGM அவர்களிடம் விளக்கினோம். கேட்ராக்ட் சிகிச்சையினை உள் நோயாளி சிகிச்சையாகக் கணக்கிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தினோம். எழுத்துப்பூர்வமான கடிதம் மாநில நிர்வாகத்திலிருந்து தேவைப்படுவதை வலியுறுத்தினோம். ஆவண செய்யுமாறு CGM அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.
*5) கோவை மாவட்டத்தில் 12 மெடிக்கல் பில்கள்* தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனையை மறுபரிசீலனை செய்யுமாறு சம்பந்தப்பட்ட ஓய்வூதியர்கள் கடிதம் கொடுத்தும், பிரச்சனை தீர்க்கப்படாததை விளக்கினோம்.
இப்பிரச்சனையின் தொடர்பாக தனித்தனியாக விவரத்தை அளிக்க நிர்வாகம் கேட்டுள்ளது. அதனை அளிப்பதாக உறுதியளித்துள்ளோம்.
நீண்ட காலத்திற்குப் பிறகு CGM அவர்களை சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு, பிரச்சனைகளைத் தீர்க்க ஏதுவாக அமைந்தது.
நிர்வாகத்திற்கு நமது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். விவாதிக்கப்பட்ட பிரச்சினைகளில் விரைவில் தீர்வு எட்டப்படும் என நம்பிக்கை கொள்கிறோம்.
தோழமையுடன்,
R ராஜசேகர்,
மாநிலச் செயலாளர்.
18.4.26

0 Comments