AIBDPA – தமிழ்நாடு மாநில மையக் கூட்டம் – 20.04.2026
தோழர்களே,
AIBDPA தமிழ்நாடு மாநில மையக் கூட்டம் 20.04.2026 அன்று மாலை இணைய வழி மூலம் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில உதவி செயலாளர் தோழர். பெர்லின் கனகராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில செயலாளர் தோழர் R. ராஜசேகர், மாநில பொருளாளர் தோழர் A. இளங்கோவன், மாநில அமைப்பு செயலாளர் தோழர் A. ஆரோக்கியநாதன், அகில இந்திய துணைத் தலைவர் தோழர் S. மோகன்தாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
கூட்டத்தின் முக்கிய ஆய்வுப் பொருளாக வரவிருக்கும் 01.05.2026 மே தினக் கொண்டாட்டம் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.
எடுக்கப்பட்ட முடிவுகள் :
1) மே தினத்தை அனைத்து கிளைகளிலும், மாவட்ட மட்டங்களிலும் உற்சாகமாகக் கொண்டாடி, கொடியேற்றம் நடத்தி, இனிப்புகள் வழங்கி, தொழிலாளர் ஒற்றுமையை வலியுறுத்த வேண்டும்.
2) ஓய்வூதியர்களின் உரிமைகளுக்கு எதிராக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தாக்குதல்கள், போராடி பெற்ற உரிமைகள் பறிக்கப்படும் நிலை ஆகியவற்றை மக்களிடையே விளக்குவதற்காக, இணைய வழி சிறப்பு கருத்தரங்கம் ஒன்று நடத்த தீர்மானிக்கப்பட்டது. இந்த கருத்தரங்கம் மே 2 அல்லது மே 9 ஆகிய தேதிகளில், சிறப்பு அழைப்பாளரின் வசதியை கருத்தில் கொண்டு நடத்தப்படும்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரின் ஒருமித்த ஒப்புதலுடன், மாநில பொருளாளர் தோழர் A. இளங்கோவன் நன்றி தெரிவித்து கூட்டம் நிறைவுற்றது.
R. ராஜசேகர்
மாநில செயலாளர்
AIBDPA – தமிழ்நாடு
20.04.2026
0 Comments