Latest

10/recent/ticker-posts

 AIBDPA TN - NCCPA / சுற்றறிக்கை.....dt. 22 ஏப்ரல் 2026

8வது மத்திய ஊதியக் குழுவிற்கு மகஜர் (Memorandum)சமர்ப்பிப்பு.

           8வது மத்திய ஊதியக் குழு (CPC) அதற்கான மகஜர் இணையம் மூலம், கேள்வி-பதில் வடிவில் மட்டுமே ஏற்கப்படுகிறது. இதன்படி, JCM வரைவுக் குழு தயாரித்த  குறிப்பு தேவையான திருத்தங்களுடன், NCCPA மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 16.4.2026 அன்று 18 கேள்வி-பதில்களும்,

இரண்டாம் கட்டமாக20.4.2026 அன்று 9 கேள்வி-பதில்களும், இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 

             ஊதியக் குழுவுடன் இணைக்கப்பட்ட அமைப்புகள், தங்களது பிரிவு சார்ந்த கோரிக்கைகளை 30.4.2026 க்குள் தனியாகவும், சேர்ந்தும் சமர்ப்பிக்கலாம். மேலும், CPC குழுவுடன் நேரடி சந்திப்பிற்கும் விண்ணப்பிக்கலாம். NCCPA, 30.4.2026 அன்று புதுடெல்லியில் நேரடி சந்திப்புக்கு விண்ணப்பித்துள்ளது.

DA/DR – 2% உயர்வு :

          01-01-2026 முதல் வழங்க வேண்டிய DA/DR உயர்வில் ஏற்பட்ட தாமதம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களிடையே கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. 

            16.4.2026 அன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டப் போராட்டம் நடைபெற்றது. NCCPA அதில் இணைந்து தனது பங்களிப்பை செலுத்தியது. இதன் விளைவாக, மத்திய அமைச்சரவை 18.4.2026 அன்று DA/DR உயர்வுக்கு ஒப்புதல் அளித்தது.

        இதனால் மொத்த DA/DR 60% ஆகிறது. இது அரசாணை வெளியீட்டின் பின்னர் அமலுக்கு வரும்.

BSNL / MTNL ஓய்வூதியர்களின் போராட்டம் :

            01-01-2026 முதல் வழங்க வேண்டிய 3.5% IDA, வழங்கப்படாமல் இருப்பதை எதிர்த்து BSNL/MTNL ஓய்வூதியர் அமைப்புகள் ஒன்றிணைந்து போராடிக்கொண்டுள்ளன. 

       இதனுடன், 01-04-2026 முதல் மேலும் 1.7% IDA நிலுவையில் உள்ளது.

               இவற்றை உடனடியாக வழங்கக்கோரி 16.4.2026 அன்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது. 

      30.4.2026 அன்று CCA & BSNL/MTNL அலுவலகங்களின் முன்பாக தர்ணாப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 

இந்த தர்ணாவிற்கு NCCPA தனது முழு ஆதரவினை அளிக்கிறது. 

மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பின் மாநாடு :

        11-12 ஏப்ரல் 2026 தினங்களில்,  ஹைதராபாத்தில் நடைபெற்ற மத்திய அரசு ஊழியர் கூட்டமைப்பின் 28வது அகில இந்திய மாநாடு பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. 

                        மாநாட்டில் மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைகள் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது. 

8வது CPCயின் விதிமுறைகள் மீதான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டு, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இணைந்த போராட்டம் அவசியம் என்பதை மாநாடு வலியுறுத்தியது. 

புதிய நிர்வாகிகள் பட்டியலில், 

தலைவராக S.B. யாதவ் அவர்களும்,

பொதுச் செயலாளராக M.S. வெங்கடேசன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

NCCPA செயற்குழு கூட்டம் :

12.4.2026 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில், தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தொடர்ச்சியான போராட்டத்தின் அவசியம் ஆகியன வலியுறுத்தப்பட்டன. 

  👉மாநில & மாவட்ட மட்டங்களில் கிளைகள் அமைத்தல்

       👉சில மாநிலங்களில் NCCPA கிளைகள் இன்னும் உருவாகவில்லை என்பது வருத்தமளிக்கிறது. 

      👉அனைத்து மாநிலங்களிலும், மாவட்டங்களிலும் கிளைகள் அமைத்து இயக்கங்களை வலுப்படுத்த வேண்டும்.

துண்டுப் பிரசுரங்கள் 

            மக்களிடம் ஆதரவு பெறும்விதமாக, FCPA தீர்மானப்படி, பொதுமக்களுக்கு விளக்கப் பிரசுரங்கள் வழங்க வேண்டும்.

மே–ஜூன் 2026 மாதங்களில் இது நிறைவேற்றப்பட வேண்டும்.

ஆண்டு நன்கொடை.

     சில அமைப்புகள் NCCPAக்கு ஆண்டு நன்கொடையினை செலுத்தவில்லை. அவை உடனடியாக செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மே தினக் கொண்டாட்டம்

மே 1 – உலகத் தொழிலாளர் தினம்.

       இன்று தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகள் கடும் தாக்குதல்களை சந்தித்து வருகின்றன.

இந்தியாவில் 4 தொழிலாளர் தொகுப்புச் சட்டங்கள் மூலம் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன.

ஓய்வூதியர்களுக்கு DA/DR வழங்காமல் மறுக்கும் முயற்சி எழுந்துள்ளது. 

8வது CPCயின் பிற்போக்கான விதிமுறைகள்

போன்ற சவால்கள் நம் முன் உள்ளன.

ஆகவே, இந்த ஆண்டு மே தினத்தை பெரிய அளவில், அனைத்து தொழிற்சங்கங்களுடன் இணைந்து கொண்டாட வேண்டும்.

TUI (P&R) சர்வதேச கூட்டம்

   21.4.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில்,  உலகளாவிய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 

இந்திய நிலை விளக்கப்பட்டது. 

3வது ஆசிய மாநாட்டினை டாக்காவில் 11. டிசம்பர் 2026 அன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 


தோழர்களே,

எதிர்காலம் மிகவும் முக்கியமானதாகவும், போராட்டம் மிகுந்ததாகவும் உள்ளது. 

நமது உரிமைகளை பாதுகாக்க தொடர்ச்சியான, தீவிரமான போராட்டம் மட்டுமே வழி வகுக்கும்.


வாழ்த்துகளுடன்,
K G. ஜெயராஜ்,
பொறுப்பு பொதுச் செயலாளர் NCCPA

Post a Comment

0 Comments