Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - உலக தொழிற்சங்க சம்மேளனம் (WFTU) - மேதின முக்கியத்துவத்தை அறிவோம்!!

 AIBDPA TN - உலக தொழிற்சங்க சம்மேளனம் (WFTU) - மேதின முக்கியத்துவத்தை அறிவோம் !!

ஓய்வுபெற்றோர் மற்றும் ஓய்வூதியர்களின் சர்வதேச தொழிற்சங்கம் (TUI P&R, WFTU) 



          மே 1, 2026 – உலக அமைதிக்கும், ஓய்வுபெற்றோரின் கண்ணியமான வாழ்விற்குமான ஆதரவு அறிவிப்பு

           மே 1, தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களின் வரலாற்றுச் சின்னமாகவும், கடந்து வந்த போராட்டங்களை நினைவுகூரல் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு நாளாகவும் விளங்குகிறது.

        இந்த ஆண்டு, சிகாகோவில் நடந்த ஹெய்மார்கெட் நிகழ்வு 140 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. 

         எட்டு மணி வேலை நேரத்திற்கான போராட்டத்தையும், நவீன சமூக மற்றும் தொழிலாளர் உரிமைகளின் அடித்தளத்தையும் அது அமைத்தது.

          இன்றைய சூழலில், சமூக சமத்துவமின்மை அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவுகளின் கடும் உயர்வு, தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமூக பாதுகாப்பு சீர்குலைதல்,  ஆகியவை தீவிரமடைந்துள்ளன.

          தொழிலாளர்களுக்கும், மூலதனத்திற்கும் இடையேயான முரண்பாடு மேலும் கூர்மையடைந்துள்ளது. சர்வதேச அளவில் போட்டிகள் மற்றும் மோதல்கள் அதிகரித்து, தொழிலாளர்கள் மற்றும் ஓய்வுபெற்றோரின் நிலை மோசமாகிக்கொண்டே இருக்கிறது. 

         நேட்டோ போன்ற அமைப்புகளும் இந்த நிலைமையில் முக்கிய பங்காற்றுகின்றன.

           தொடர்ச்சியான பணவீக்கம், வருமான அழுத்தம், மற்றும் சுகாதாரம், சமூக பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய பொது சேவைகளின் வணிகமயமாக்கல், ஆகியவை தொழிலாளர் வர்க்கத்தினரை மிகத் தீவிரமாக பாதிக்கின்றன. 

           ஓய்வுபெற்றோர் மற்றும் மிகவும் பாதிக்கப்படும் சமூகக் குழுக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய கடுமையாகப் போராடுகின்றனர்.

மே 1 உலகத் தொழிலாளர் தினம் !

            பெண்களின் உரிமைகளுக்கான ஒற்றுமை மற்றும் போராட்டத்தின் வலிமையான தருணமாகும்.

         மே 1 அன்று, உலக பாலின சமத்துவ செயலாளரகம் ஓய்வுபெற்றோர், வேலை இழந்தோர், தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள், இளைஞர்கள், குடியேறிகள், அகதிப் பெண்கள் ஆகிய அனைவரையும் ஆண்களுடன் இணைந்து, சமத்துவமின்மை, வன்முறை, அடக்குமுறை மற்றும் சுரண்டலுக்கு எதிராக போராட அழைக்கிறது.

      மூலதன லாபத்தின் பெயரில் மக்களின் தேவைகளையும், வாழ்க்கையையும் பலிகொடுக்க முயலும் சக்திகளுக்கு எதிராக நாம் நிற்கிறோம்.

            நமது குழந்தைகள் போரின் ஆயுதங்களால் அழிக்கப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்

              பொது மற்றும் கிராமப்புற தொழிலாளர்களின் சர்வதேச ஒன்றியம் (IURP), இந்த உரிமைகளை பாதுகாக்கவும், நிலையற்ற வேலை மற்றும் சுரண்டலுக்கு எதிராகப் போராடவும் மக்களை அழைக்கிறது.

         இது சம உரிமைகள், சம வேலை நிலைகள், பெண்களின் பாதுகாப்பு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

             இன்றைய உலகில், பல நாடுகளும் மக்களும் தடைகள், தலையீடுகள் போன்ற அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர்.  கியூபா, பாலஸ்தீனம், ஈரான், வெனிசுலா போன்றவை அதில் அடங்கும். இத்தகைய கொள்கைகள் பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களை தீவிரப்படுத்தி, மக்களின் தன்னாட்சி உரிமையை பாதிக்கின்றன.

            சர்வதேச போட்டிகளும் பேராதிக்க அரசியலும் உலகளவில் பதற்றத்தையும் ஆயுத மோதல்களையும் அதிகரிக்கின்றன. போர்களும் இராணுவத் தலையீடுகளும் மக்களின் துயரத்தை அதிகரித்து, பெரும் அழிவை ஏற்படுத்துகின்றன.  மேலும் சமூகத் தேவைகள் மற்றும் பொது சேவைகளுக்கான வளங்களை மடை திருப்புகின்றன.

       இந்த சூழலில், அதிகார மோதல்களின் சுமையை தொழிலாளர்களும் பொதுமக்களும் தான் அதிகமாக சுமக்கின்றனர்.

இந்த நிலையில், மே 1 என்பது:

   போராட்டம், நினைவுகூரல், மற்றும் கண்ணியமான வாழ்க்கை மற்றும் வேலைநிலைகளுக்கான தொடர்ந்த கோரிக்கைகளின் நாளாகும்.

நமது கோரிக்கைகள்

வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப ஊதியமும், ஓய்வூதியமும் உயர்த்தப்பட வேண்டும்

அனைவருக்கும் இலவச பொது சுகாதார சேவை,

சமூக பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்துதல் வேண்டும்

வேலை பாதுகாப்பு மற்றும் நிலையற்ற வேலைக்கு எதிரான போராட்டம்

         மே 1 ஆர்ப்பாட்டங்களில் தொழிலாளர்கள், ஓய்வுபெற்றோர் மற்றும் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைக்கிறோம்.

         ஒற்றுமையும் கூட்டு நடவடிக்கையும் தான் சமூக மற்றும் தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கவும் விரிவுபடுத்தவும் உதவும் அடிப்படை சக்திகள்.

      மே 1 நினைவு நாளாக மட்டுமல்ல, வேலைநிறுத்தம், பொறுப்பு மற்றும் தொடர்ச்சியான போராட்டத்தின் நாளாகவும் அமைகிறது.

தோழமையுடன்,

 TUI P&R அமைப்பு.

23.4.26

Post a Comment

0 Comments