Latest

10/recent/ticker-posts

நொய்டா தொழிலாளர் ஆதரவு இயக்கம்

  AIBDPA TN

அனைத்து மத்திய தர ஊழியர், ஆசிரியர், பொதுத்துறை ஊழியர் சங்க கூட்டம்

&

நொய்டா தொழிலாளர் ஆதரவு இயக்கம்


       தமிழ்நாட்டின் மத்தியதர ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை ஊழியர், ஓய்வு பெற்றோர் அமைப்புகளின் தலைவர்கள் கூட்டம் இணைய வழியில் 26.04.2026 அன்று நடைபெற்றது. 

               இக்கூட்டத்திற்கு தோழர் வெ. சோமசுந்தரம் (தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்) தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தோழர்கள் மயில் (தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி), ஜி.ஆனந்த், ஜானகிராமன் (அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்), செல்லப்பா, ஶ்ரீதர சுப்ரமணியன், மாரிமுத்து (BSNL ஊழியர் சங்கம்), சுனில்குமார் (இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு - BEFI), அன்பழகன் (தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கம்), ஆர். ராஜசேகர் (BSNL ஓய்வூதியர் சங்கம்), குமரேசன் (தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்கம்), ஜெயச்சந்திரன் (தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம்), பர்வதராஜன் (தமிழ்நாடு ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கம்) ஆகியோர் பங்கேற்றனர். 

               தோழர் கருமலையான், எஸ்.கண்ணன் (சி.ஐ.டி. யூ) நொய்டா தொழிலாளர் போராட்டம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள். 

முடிவுகள் :

1) துண்டுப் பிரசுரம் தயார் செய்து விரிவாக கொண்டு செல்வது. 

2) மே தின விழாவில் எல்லா மத்திய தர அரங்கங்களும் முன்னணி ஊழியர்களை திரளாக பங்கேற்க வைப்பது. 

3) ஆசிரிய அமைப்புகள் போஸ்டர்கள் போடுவது

4) மத்திய தர ஊழியர் அமைப்புகள் நிதி சேகரித்து வழங்குவது, அதற்கு அமைப்புகளில்  முறையான முடிவுகளை எடுப்பது. 

5) எல்லா அரங்கங்களும் ஆன்லைன் கூட்டங்களுக்கு தனித்தனியாக  ஏற்பாடு செய்து சி.ஐ.டி.யூ தலைவர்கள் பங்கேற்று 100 க்கும் குறைவில்லா முன்னணி ஊழியர்களை பங்கேற்க வைப்பது. 

6) மதுரை, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட மையங்கள். 

7) சென்னை சிறப்பு மாநாடு (வட மாவட்டங்கள்). தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும். 

இந்த இயக்கங்களில் நமது அமைப்பு தோழர்கள் முழுமையாக பங்கேற்க  வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 

தோழமையுள்ள,
R.ராஜசேகர்,
மாநில செயலர்
AIBDPA 
தமிழ் நாடு.
26.4.26

Post a Comment

0 Comments