Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - ஓய்வின்றிப் போராட ஓய்வூதியர்கள் ஆயத்தமாவோம்...💪

  AIBDPA TN - ஓய்வின்றிப் போராட ஓய்வூதியர்கள் ஆயத்தமாவோம்...💪


தோழர்களே,

           நாம் போராடிப் பெற்ற ஓய்வூதியத்தையும், அதன் நலன்களையும் சீரழிக்க முனையும் மத்திய அரசின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிராக ஓய்வூதியர்கள் ஒன்றுபட்டுப் போராடுவோம் !

           2004ஆம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) விலக்கப்பட்டு, புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) கொண்டு வரப்பட்டது. அடிப்படை சம்பளத்தின் 50% தொகையை ஓய்வூதியமாக வழங்குவதற்குப் பதிலாக, ரூ.4000–4500 போன்ற மிகக் குறைந்த சொற்பத் தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. UPS திட்டமும் இதற்கு மேம்பட்டதல்ல. இது மத்திய அரசின் நம்பிக்கை துரோகச் செயலாகும்.

          “ஒன் ரேங்க் ஒன் பென்ஷன்” (OROP) என்ற ஓய்வூதியத் திட்டம் பாதுகாப்புப் படை ஓய்வூதியர்களுக்கு மட்டுமே, அதுவும் அவர்களின் கடும் போராட்டத்திற்குப் பிறகே வழங்கப்பட்டது. பாதுகாப்புத் துறையில் உள்ள சிவில் ஓய்வூதியர்கள் உட்பட மற்றவர்களுக்கு இது மறுக்கப்பட்டது. 

           சுமார் 4 லட்சம் BSNL–MTNL ஓய்வூதியர்களுக்கு 01.01.2017 முதல் கிடைக்க வேண்டிய ஓய்வூதிய மாற்றம் இதுவரை வழங்கப்படவில்லை. 2007 முதல் 19 ஆண்டுகளாக ஓய்வூதிய மாற்றம் இல்லை. BSNL பொதுத்துறையாக மாற்றப்பட்ட போது அளிக்கப்பட்ட உறுதிமொழி மீறப்பட்டுள்ளது.

         2025 மார்ச் மாத நிதி மசோதாவின் ஒரு பகுதியாக ஓய்வூதிய சரிபார்ப்புச் சட்டம் (Pension Validation Act) எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டது.

            1982ஆம் ஆண்டின் வரலாற்றுப் புகழ்பெற்ற “நகரா” வழக்குத் தீர்ப்பு உள்ளிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்புகளை தகர்க்கும் நோக்கத்துடன் இது கொண்டு வரப்பட்டது.

             8வது மத்திய ஊதியக் குழு நியமனம் தாமதிக்கப்பட்டது. நியமித்த பிறகு அதன் வரையறைகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டன. மனுக்கள் சமர்ப்பிப்பதிலும் கட்டுப்பாடுகள்,  ஓய்வூதியர்களின் பிரச்சினைகளும் புறக்கணிக்கப்பட்டன.

               “அக்னிவீர்” ராணுவ ஆட்சேர்ப்பு திட்டம் மூலம் 4 ஆண்டுகள் சேவைக்கு பிறகு ஓய்வூதியம் இல்லை. இது எதிர்கால ஓய்வூதிய அமைப்புக்கு மிகப் பெரிய எச்சரிக்கையாகும்.

           தற்போது BSNL–MTNL ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு 01.01.2026 மற்றும் 01.04.2026 முதல் கிடைக்க வேண்டிய IDA/IDR மறுக்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு DA/DR வழங்கப்பட்டும், இங்கு அது மறுக்கப்படுகிறது.

              மத்திய அரசு ஓய்வூதியர்கள் 49 லட்சம் பேர் கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

         12 பிப்ரவரி 2026 அன்று 25 கோடித் தொழிலாளர்கள் பொதுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீண்டும் போராட்டப் பாதையில் தொடர்ந்து சென்றுகொண்டு உள்ளனர். நொய்டா உள்ளிட்ட இடங்களில் அடக்குமுறைகளையும், சந்தித்தனர்.

       நாட்டு மக்களுக்கு உணவளிக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளும் போராட்டத்தில் உள்ளனர்.

       நாடு முழுவதும் உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைக்காக போராடுகின்றனர்.

        ஒருபுறம் உழைக்கும் மக்களுக்கு நியாப்படி கிடைக்கவேண்டிய அனைத்தும் மறுக்கப்படுகின்ற நிலையில், மறுபுறம் பெரிய நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.  ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் கணக்கில்லாமல் வீணாக செலவிடப்படுகின்றது என்று CAG அறிக்கை கூட கண்டித்துள்ளது.

             NCCPA உள்ளிட்ட ஓய்வூதியர் அமைப்புகள் FCPA என்ற தளத்தை அமைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருவதற்கு வாழ்த்துக்கள்.

        AUAB மற்றும் CBMPA அமைப்புகள் BSNL–MTNL ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களை ஒருங்கிணைத்து IDA/IDRக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வாழ்த்துக்கள்.

           வரலாற்றின் சில முக்கிய தருணங்களில், ஒருங்கிணைந்த, தொடர்ச்சியான கடுமையான போராட்டங்களே, நம் உரிமைகளை பாதுகாக்கும் ஒரே வழியாகும்.

        CBMPA அடுத்த கட்ட நடவடிக்கையாக 30 ஏப்ரல் 2026 அன்று CGM/CCA அலுவலகங்கள் முன் மாபெரும் தர்ணா நடத்த அழைப்பு விடுத்துள்ளது. NCCPA, AUAB, Confederation உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அனைத்து BSNL–MTNL ஓய்வூதியர்களும் இதில் பங்கேற்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

      2026 ஏப்ரல் 30 தர்ணாவை மாபெரும் வெற்றியாக மாற்றுவோம் !!

போராடுவோம் !

வெற்றி பெறுவோம் !!


V A N நம்பூதிரி,

புரவலர் AIBDPA,

22.04.2026

Post a Comment

0 Comments