Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - சுற்றறிக்கை 5/26....தேதி 3.4.26

 AIBDPA TN - சுற்றறிக்கை 5/26....தேதி 3.4.26

BSNL/MTNL ஓய்வூதியர்கள் சங்கங்களின் கமிட்டி






 

தோழர்களே,

           BSNL/MTNL ஓய்வூதியர்கள் 01.01.2026 முதல் அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி நிவாரணம் (Dearness Relief) வழங்கப்படாததால் மிகுந்த கவலையில் உள்ளனர். இதற்குப் பின்னால் அரசின் தவறான /விஷமத்தனமான நடவடிக்கை இருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்.

         இந்த நிலையில், AIBSNLPWA இன்று (03.04.2026) ஒரு இணையவழி கூட்டத்தை நடத்தி, BSNL மற்றும் MTNL ஓய்வூதியர்கள் சங்கங்களை அழைத்தது. 

தோழர். டி. கோபாலகிருஷ்ணன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.

பின்வரும் சங்கங்களும் அவற்றின் தலைவர்களும் கலந்து கொண்டனர்:

1. AIBSNLPWA (தோழர். பி. எஸ். ராமன்குட்டி, டி. கோபாலகிருஷ்ணன், வி. வரபிரசாத், அனுபம் கௌல், டி. எஸ். விட்டோபன்)

2. AIBDPA (தோழர். வி. ஏ. என். நம்பூதிரி, கே. ஜி. ஜெயராஜ், எம். ஆர். தாஸ், ஆர். முரளிதரன் நாயர்)

3. BDPA (I) (தோழர் டி. டி. மிஸ்திரி)

4. SNPWA (தோழர் ஜி. எல். ஜோகி)

5. AIRBSNLEWA (தோழர் பிரஹலாத் ராய்)

6. RTOWA டெல்லி (தோழர் எம். கே. பக்சி, ஏ. கே. கௌஷிக்)

7. RTOWA மும்பை (தோழர் ஜவஹர், ஜே. எஸ். யாதவ்)

8. மகாநகர் PWA, மும்பை (தோழர் கிஷோர் ஹால்டாங்கர்)

சில காரணங்களால் தோழர் ஹரிஹரன் நாயர் (BDPA, கேரளா) மற்றும் தோழர் ஆர். கே. முத்கல் (MREWA, டெல்லி) கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவர்கள் முடிவுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.

AIBSNLREA அழைக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

கூட்ட முடிவுகள் (ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.)

மேற்கண்ட அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்களின் பொது செயலாளர்கள் இணைந்து கையொப்பமிட்டு, 01.01.2026 முதல் நிலுவையில் உள்ள அகவிலைப்படி நிவாரணத்தை உடனடியாக வழங்கவும், மேலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தாமதமின்றி வழங்கவும் கோரி கீழ்க்கண்டவர்களுக்கு கடிதம் அனுப்பப்படும்:

a) அமைச்சரவை செயலாளர்

b) தொலைத்தொடர்பு செயலாளர்

c) செலவுத்துறை செயலாளர்

d) பொது நிறுவனங்கள் துறை செயலாளர்

e) DoP&PW செயலாளர்

             இந்தக் கடிதம் டெல்லியில் உள்ள தலைவர்கள் (எம். கே. பக்சி / ஜி. எல். ஜோகி / ஏ. கே. கௌஷிக் போன்றோர்) நேரடியாக வழங்குவார்கள். அதே கடிதத்தில் பின்வரும் போராட்டத் திட்டமும் தெரிவிக்கப்படும்:

போராட்ட திட்டம்:

          16.04.2026 – நாடு முழுவதும் CCA அலுவலகங்கள் மற்றும் பிற இடங்களில் உள்ள BSNL அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

(நேரம் உள்ளூர் அளவில் தீர்மானிக்கப்படும். டெல்லியில் இது Eastern Court-இல் நடைபெறும்.)

    30.04.2026 – இந்தியா முழுவதும் ஒருநாள் தர்ணா (Dharna) நடைபெறும்.

BSNL/MTNL ஓய்வூதியர்களின் கோரிக்கைக்கு அரசு நேர்மறையான பதில் அளிக்கும் என்று நம்புகிறோம். இல்லையெனில், குழு மீண்டும் கூடிக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கும்.


கையொப்பமிட்டவர்கள்:

மேற்கண்ட அனைத்து ஓய்வூதியர்கள் சங்கங்களின் பொது செயலாளர்கள்

 03.04.2026

Post a Comment

0 Comments