திருச்சி மாவட்ட கரூர் 1 & 2 கிளைகளின்இணைந்த பொதுக்குழு கூட்டம்
அன்பார்ந்த தோழர்களே !! வணக்கம்.
கரூர் 1 மற்றும் 2 கிளைகளின்இணைந்த பொதுக்குழு கூட்டம் தோழர்கள். G.ராமச்சந்திரன் மற்றும் P.இளங்கோவன் அவர்கள் தலைமையில் 7/4/2026 அன்று கரூரில் நடைபெற்றது. தோழர் K.தண்டபாண்டி அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர் I. ஜான் பாஷா கிளை செயலர் 2 வரவேற்புரையாற்றினார். தோழர். T.மனோகரன் கிளைசெயலர் 1 உறுப்பினர்கள் பிரச்சனைகளை முன் வைத்தார்.
மாநில பொருளாளர் தோழர் A.இளங்கோவன், சி ஐ டி யு மாவட்ட செயலாளர் தோழர் M. சுப்பிரமணியன் கருத்துரை வழங்கினார்கள். மாவட்டச் செயலர் தோழர் S.அஸ்லம் பாஷா கிளைகளின் பிரச்சனைகள் சம்பந்தமாக தற்போதைய நிலைமை, தீர்க்கப்படாத பிரச்சினைகள் விரைவில் தீர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் வர இருக்கின்ற போராட்டங்கள் (IDA வுக்காக 16 ந்தேதி ஆர்ப்பாட்டம், 30 ந்தேதி தர்ணா) சம்பந்தமாக விளக்கி பேசினார்.
அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் N.குப்பசாமி அவர்கள் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிகாட்டி சிறப்புரை ஆற்றினார்கள். கிளை பொருளாளர் தோழர். P.நாகராஜன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் K.நாகராஜன் உட்பட 20க்கும் மேற்பட்ட கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.




0 Comments