நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கிளை 3 வது கிளை மாநாடு !!
வணக்கம் தோழர்களே...!!!
07-04-2026 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் சங்கரன்கோவில் ஐம்பதூர் தேவாங்கர் சத்திரம் கல்யாண மண்டபத்தில் சங்கரன்கோவில் கிளையின் 3 வது கிளை மாநாடு நடைபெற்றது. மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக நமது AIBDPA சங்க கொடியை அகில இந்திய துணை தலைவர் தோழர். S.மோகன்தாஸ் விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.
தோழர். S. K.மாரியப்பன், கிளைத் தலைவர் தலைமை தாங்கினார். தோழர் P. A.ராஜா முகமது, கிளை உதவி செயலாளர் அஞ்சலி உரையாற்றினார். தோழர். D. கிறிஸ்டோபர் ராஜதுரை, கிளைச் செயலர் வரவேற்புரையாற்றினார்.
தோழர் S.முத்துசாமி, மாவட்ட செயலாளர் துவக்க உரையாற்றினார். தோழர் S.மோகன்தாஸ், அகில இந்திய துணை தலைவர், தோழர். S.நடராஜா, மாநில உதவி தலைவர் மற்றும் தோழர் R. ராமநாதன், மாநில தணிக்கையாளர் ஆகியோர் சிறப்புறையாற்றினர்.
தோழர் NSMAV, மாவட்ட செயலாளர் BSNLEU மற்றும் தோழியர் S. அழகுநாச்சியார் மாநில உதவி செயலர், BSNLEU ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். AIBDPA மாவட்ட பொருளாளர் தோழர் S.சங்கரநாராயணன், மாவட்ட உதவி செயலாளர் தோழர். R. M. கிறிஸ்டோபர், AIBDPA கிளைச் செயலாளர்கள் தோழர் S. P. கணேசன் (அம்பை), தோழர் A. பிச்சுமணி (வள்ளியூர்), தோழர் P. சூசை ( பாளை), தோழர். S.செல்லத்துரை (நெல்லை), தோழர் S.வேலுச்சாமி (தென்காசி சார்பாக) மற்றும் தோழர். கோமதிநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஆண்டறிக்கையும் நிதிநிலை அறிக்கையும் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வினை மாவட்ட செயலாளர் தோழர் S.முத்துசாமி நடத்தினார். தோழர். S. K. மாரியப்பன் கிளைத் தலைவர், தோழர். D.கிறிஸ்டோபர் ராஜதுரை கிளைச் செயலாளர், தோழர். V. ராமநாதன் கிளைப் பொருளாளர் உள்ளிட்ட 11 தோழர்கள் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். நிறைவாக தோழர். V. ராமநாதன் கிளைப் பொருளாளர் நன்றி கூறினார்.
கிளைச் செயலர்,
சங்கரன்கோவில் கிளை,
திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்டம்.
07-04-2026.





0 Comments