AIBDPA - TN சுற்றறிக்கை எண் 4/ 26
Joint CCA திருமதி கௌதமி பாலா ஸ்ரீ அவர்களுடன் பேட்டி-01.04.2026
தோழர்களே,
மாநிலச் சங்கத்தின் சார்பில் Joit CCA திருமதி கௌதமி பாலா ஸ்ரீ அவர்களை 1.4.26 அன்று சந்தித்து பேட்டி காணப்பட்டது. மாநில சங்கத்தின் சார்பில் மாநிலச் செயலர் தோழர் R ராஜசேகர், மாநில அமைப்பு செயலாளர்கள் தோழர் A ஆரோக்கியநாதன், தோழர் முஹம்மது ஜாபர், மற்றும் தோழர் R சீனிவாச ராகவன் ஆகியோர் பேட்டியில் கலந்து கொண்டனர்.
விவாதிக்கப்பட்ட பிரச்சனைகளும், எட்டப்பட்ட தீர்வுகளும்.
1) I D கார்டுகள்
சுமார் 1500 I D கார்டுகள் தற்போது தயாராக உள்ளன. அவை ஓய்வூதியர்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். நேரில் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் நேரில் பெற்றுக் கொள்ளலாம். இனி I D கார்டுகள் முறையாக அச்சிடும் பணி CCA அலுவலகத்தில் தடையின்றி நடைபெறும்.
CCA, அலுவலகத்தில் சங்கம் சார்பாக உறுப்பினர் அடையாள அட்டைகளை நாம் தெரிந்தெடுத்து அனுப்பவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
2) KYP விண்ணப்பங்கள், மற்றும் EPPO பணி
பல்வேறு பணிகளின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த EPPO பணிகள் தற்போது துவங்கியுள்ளது. பெறப்பட்டுள்ள KYP விண்ணப்பங்கள் அடிப்படையில் EPPO Updation பணி நடைபெறும். இன்னும் 20, 000 EPPOக்கள் அப்டேட் செய்யப்பட வேண்டியுள்ளது.
3) PDA அலுவலக தொலைபேசி பிரச்சனை.
PDA அலுவலகத்தில் உள்ள தொலைபேசியில் சில வாரங்களாக பதில் கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
புதிய பணியாளர்களை அமர்த்தி சரி செய்வதாக உறுதியளித்தார்.
தனி நபர் பிரச்சனைகள்
1) கோவை STR சினேகலதா D/O C P மாதவன், குடும்ப ஓய்வூதியர் Re Authorisation
2) புதுச்சேரி, கிருஷ்ணவேணி M/O ராமகிருஷ்ணன் குடும்ப ஓய்வூதியம், Re Authorisation
3) கடலூர் M குல்சார் பேகம், W/O முகமது அஜீஸ் குடும்ப ஓய்வூதியம் Authorisation
4) வேலூர் நவநீதம் W/O ரேணு Duel Pension
5) குன்னூர் சதாசிவம் ஓய்வூதிய அஞ்சலக கணக்கு மாற்றம்
6) லியோ பீட்டர் அமல்ராஜ் H/O ஜோஸ்பின் ஸ்டெல்லா மேரி, குடும்ப ஓய்வூதியர் Authorisation
7) மணிமேகலை, D/O புஷ்பா Re-Authorisation (அதாலத் பிரச்சனை) நிலுவைத் தொகை
8) கிரேஸிலின் D/O நாதன் (அதாலத் பிரச்சனை) நிலுவைத் தொகை Re Authorisation,
9) ஈரோடு ராஜேஸ்வரி W/o ஜெயராஜ் குடும்ப ஓய்வூதியம் (சட்ட விளக்கம்)
10) சேலம் விமலா Re-Authorisation F/P
ஆகிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு விரைவில் தீர்வு காண ஒப்புக்கொள்ளப்பட்டது.
கோவை B A வுக்கான பென்ஷன் அதாலத் ஏப்ரல் 28, 2026 அன்று கோவையில் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். கோவை மற்றும் குன்னூர் மாவட்டச் சங்கங்கள் தங்கள் பகுதியில் நிலுவையில் உள்ள பிரச்சனைகளை 13 ஏப்ரல் 2026க்குள் CCA விற்கு உரிய படிவத்தில் அனுப்ப வேண்டும்.
மொத்தத்தில் தீர்வை நோக்கிய சுமூகமான முறையில் பேட்டி நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
R ராஜசேகர்,
மாநிலச் செயலர்.
1.4.2026
0 Comments