Latest

10/recent/ticker-posts

சென்னை CCA அலுவலக அலுவலர் தோழர் சதீஷ் குமார் அவர்கள் 30.3.26 அன்று பணி ஓய்வு !!

  AIBDPA தமிழ் மாநிலம்.

 சென்னை CCA அலுவலக அலுவலர் தோழர் சதீஷ் குமார் அவர்கள் 30.3.26 அன்று பணி ஓய்வு



தோழர்களே,

சென்னை CCA அலுவலகத்தில் பணியாற்றிய தோழர் சதீஷ்குமார் 30.3.26 இன்று பணி ஓய்வு பெறுகிறார். இந்திய இராணுவ பணிக்குப் பின், தொலைத் தொடர்புத் துறையில் பணியில் சேர்ந்து மொத்தம் 40 ஆண்டு கால சேவையை நிறைவு செய்துள்ளார். 

CCA அலுவலகத்தில் Re authorisation, Co authorisation, Duel Pension, இரண்டாம் திருமணம் தொடர்பான ஓய்வூதியர் பிரச்சனைகளைத் தீர்க்கும் அலுவலராக சிறப்பாக பணியாற்றி வந்தார். எல்லாப் பிரச்சனைகளையும் கனிவோடும், மனிதாபிமானத்தோடும் அணுகும் தன்மை கொண்டவர். ஏராளமான Co Authorisation பிரச்சனைகள் நிலுவையில் இருந்த சமயத்தில் ஒரே மாதத்திற்குள் 34 Co Authorisation பிரச்சனைகளை தீர்த்து வைத்ததில் முக்கிய பங்காற்றியவர்.

 இவரது சிறப்பான நிர்வாகப் பணியினைப் பாராட்டி நமது மாநிலச் சங்கத்தின் சார்பாக சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இவரது பணி ஓய்வுக்காலம் சிறப்பாக அமைய மாநிலச் சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.


தோழமையுள்ள 
R.ராஜசேகர்
மாநில செயலர்
30.3.26

Post a Comment

0 Comments