AIBDPA தமிழ்நாடு*
30 ஏப்ரல் போராட்டம் ஒத்தி வைப்பு-
Committee of BSNL-MTNL Pensioner's Assn. முடிவு
தோழர்களே !
நமக்கு 1-1-26 முதல் வழங்கப்பட வேண்டிய 3.5% அகவிலைப்படி ( IDA/ DR) DPE 27-2-26 ல் உத்தரவிட்டும் DoT நிர்வாகத்தால் பட்டுவாடா செய்யப்படவில்லை.
ஆகவே நமது கூட்டுக்குழு அறிவித்தபடி நாடுமுழுதும் ஓய்வூதியர்கள் ஒன்றுபட்டு 16-4-26 அன்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தியமைக்கு கூட்டுக்குழு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிக்கிறது.
அப்போராட்டத்தின் வீச்சால் DPE 1-4-26 முதல் 1.6% IDA/ DR வழங்க 24-4-26ல் வெளியிட்ட உத்தரவில் (IDA பட்டுவாடாவிற்கு தடையாக முன்பு போட்ட நிபந்தனைகளடங்கிய Para 5 ஐ நீக்கிவிட்டு,) தெளிவான உத்தரவை வெளியிட்டுள்ளது நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
ஆகவே முன்பு 1-1-26 முதல் வழங்கப்படவேண்டிய IDA/DR ம் DoT ஆல் பட்டுவாடா செய்யப்படவேண்டுமென்றும், இனி வழக்கம்போல 3 மாதத்திற்கொருமுறை IDA/DR வழங்கப்பட வேண்டுமென்றும் உறுதியாகியுள்ளது.
எனவே தற்போது DPE உத்தரவு வெளியிட்டுள்ள சாதகமான சூழலைப்பற்றி விவாதித்த கூட்டுக் குழுவின் பொதுச்செயலர்கள் 30-4-26 அன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்த தர்ணா/ ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைப்பது என்றும், பட்டுவாடா செய்வதற்கான நிர்வாக உத்தரவை உடனடியாக வெளியிடுமாறு DoT நிர்வாகத்தை வலியுறுத்துவது என்றும் முடிவெடுத்து அறிவித்துள்ளது.
மேலும் தாமதம் ஏற்படுமானால் போராட்டத்தை தொடர்வது என்றும் முடிவெடுத்துள்ளது.
போராட்டங்களில் பங்கேற்ற ஓய்வூதியர்களுக்கு மீண்டும் நன்றி பாராட்டுவதோடு, ஒன்றுபட்ட போராட்டங்களைத் தொடர்ந்து நாம் முன்னெடுப்போம் என அறிவித்துள்ளது.
(ஒப்பம்) அனைத்து பொதுச்செயலர்கள்.
மாநிலச்செயலர்.
28.4.26


0 Comments