Latest

10/recent/ticker-posts

BSNLEU, AIBDPA மற்றும் TNTCWU சங்கங்களின், தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்ட முடிவுகள்*

 AIBDPA TN


  BSNLEU, AIBDPA மற்றும் TNTCWU சங்கங்களின், தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்ட முடிவுகள்

 தோழர்களே, 

                BSNLEU, AIBDPA மற்றும் TNTCWU சங்கங்களின், தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம், 12.03.2026 அன்று காணொளி காட்சி மூலம் தோழர் R.ராஜசேகர் CS AIBDPA தலைமையில் நடைபெற்றது.  

      இந்த கூட்டத்தில் தோழர் S.செல்லப்பா AGS BSNLEU, தோழர் S.மகேஸ்வரன் CP BSNLEU, தோழர் B.மாரிமுத்து CS BSNLEU, தோழர் C.ஞானசேகரன் CP AIBDPA, தோழர் R.ராஜசேகர் CS AIBDPA, தோழர் A.பாபு ராதாகிருஷ்ணன் AGS BSNL CCWF, தோழர் C.பழனிச்சாமி CP TNTCWU மற்றும் தோழர் S. சையது இத்ரீஸ் CS TNTCWU ஆகியோர் பங்கேற்றனர்.

          தோழர் S.செல்லப்பா AGS BSNLEU மற்றும் ஒருங்கிணைப்பு குழுவின் அமைப்பாளர் தோழர் B.மாரிமுத்து ஆகியோர், அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் முடிவுகளை தெரிவித்தனர். 

            இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து தோழர்களும், விவாதத்தில்  தங்களுடைய கருத்துக்களை தெரிவித்த பின், இறுதியாக கீழ்க்கண்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டன.

1) 20.03.2026 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் வெள்ளி விழாவை கூட்டமைப்பின் சார்பாக சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. 

2) 16.03.2026க்குள், அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்தி, நடைபெற வேண்டிய இயக்கங்களை வெற்றிகரமாக நடத்திட திட்டமிட வேண்டும்.

3) அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு  கூட்ட முடிவின் அடிப்படையில், கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 23.03.2026 அன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கள் சார்பாக, மாலை நேர தர்ணா போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திட வேண்டும்.

 கோரிக்கைகள் :-

1) ஊதிய மாற்றத்தை உடனடியாக அமலாக்கு. 

2) ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக ஏற்படுத்து. 

3) PENSION VALIDATION சட்டத்தை திரும்ப பெறு. 

4) NATIONAL MONETISATION PIPELINE 2.Oவை கைவிடு.

5) BSNLலில் 2ஆவது விருப்ப ஓய்வு திட்டத்தை கொண்டு வராதே. 

6) ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யாதே. 

7) கேஷுவல் ஊழியர்களுக்கு, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை வழங்கிடு.

BSNL நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக, ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம்.

தோழமை வாழ்த்துக்களுடன்,
தோழர் B.மாரிமுத்து அமைப்பாளர் CoC.
தோழர் R.ராஜசேகர் தலைவர் CoC 
தோழர் M.சையது இத்ரீஸ் இணை அமைப்பாளர் CoC

13.3.26

Post a Comment

0 Comments