AIBDPA TN  மாநில மைய கூட்டம் 14-03-2026 முடிவுகள்

சுற்றறிக்கை 3/26

தோழர்களே, 

                  தமிழ் மாநிலச் சங்க மைய கூட்டம் 14-03-2026 அன்று watsapp call வாயிலாக நடைபெற்றது. மாநிலத் தலைவர்  தோழர். C.ஞானசேகரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில செயலாளர் தோழர். R.ராஜசேகர், மாநில பொருளாளர் தோழர். A. இளங்கோவன், மாநில உதவிச் செயலாளர் தோழியர்.  பெர்லின், மாநில அமைப்புச் செயலாளர் தோழர். A. ஆரோக்கிய நாதன்,  அகில இந்திய துணைத் தலைவர் தோழர். எஸ். மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

முடிவுகள்:-

1) தமிழ் மாநில COC முடிவின் படி BSNLEU அமைப்பு தின வெள்ளி விழாவை 20-03-2026 அன்று சிறப்பாக  நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

2). அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு (COC) கூட்ட முடிவின் அடிப்படையில் கீழ் கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23-03-2026 அன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் சார்பாக, மாலை நேர தர்ணா போராட்டங்களை வெற்றிகரமாக நடத்திட வேண்டும் .

கோரிக்கைகள்:

a). ஊதிய, ஓய்வூதிய மாற்றத்தை உடனடியாக அமலாக்கு !! 

b). பென்சன் மறுசீரமைப்பு திட்டத்தை திரும்ப பெறு !!

c). தேசிய பணமாக்கல் திட்டம் 2.0 வை கைவிடு !!

d). BSNLல் 2வது விருப்ப ஓய்வு திட்டத்தை கை விடு !!.

e). ஒப்பந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்யாதே !!

f). கேசுவல் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதியத்தை வழங்கிடு !!

மாவட்டங்களில் COC கூட்டங்களை உடனடியாக கூட்டி திட்டமிட வேண்டும்.   

3). மகளிர் தினத்தை இதுவரை நடத்தாத மாவட்டங்கள் உடனடியாக  நடத்திட திட்டமிட வேண்டும். 

மேற்குறிப்பிட்ட முடிவுகளை மாவட்டங்கள் முறையாக அமுல்படுத்திட வேண்டும். 

தோழமையுள்ள
R.ராஜசேகர்
மாநில செயலர்
14-03-2026.