Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற சென்னை CGM (O) மாவட்ட செயற்குழு கூட்டம்

சிறப்பாக நடைபெற்ற சென்னை CGM (O) மாவட்ட செயற்குழு கூட்டம் 





 அன்பார்ந்த தோழர்களே !!

                    இன்று 10.02.26 காலை 11.00 மணியளவில் சென்னை CGM(O) மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர். பெர்லின் கனகராஜ் ததலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலர் தோழர்.  சிரில் ராஜ் வரவேற்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து மாவட்டத் தலைவர் தோழர். பெர்லின்   ஆய்படுபொருள் பற்றி விளக்கி கூறியதோடு பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற இருக்கின்ற அகில இந்திய பொது வேலைநிறுத்தம் பற்றியும் அரசின் மக்களுக்கு எதிரான கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளைப் பற்றியும் கூறி வேலைநிறுத்தம் செய்வதன் அவசியத்தை விளக்கியதோடு பிப்ரவரி 13ம் தேதி நடைபெறுகின்ற எப் சி பி ஏ அமைப்பின்  தர்ணாவிலும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கின்ற கருத்தரங்கத்திலும் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். மார்ச் 8 மகளிர் தினம் அனுசரிப்பதை திட்டமிட வேண்டும் எனவும் கூறி தலைமை உரையை நிறைவு செய்தார். 

               நமது சங்கத்தின் வழிகாட்டியும், ஆலோசகருமான தோழர். சி. கே. நரசிம்மன் தமது  சிறப்புரையில் நடந்து முடிந்த ஐந்தாவது அகில இந்திய மாநாட்டின் சிறப்புகள் பற்றியும், நடைபெறவிருக்கின்ற போராட்டங்கள், வேலை நிறுத்த போராட்டம் இவற்றின் அவசியத்தையும் விளக்கி கூறினார். அதைத்தொடர்ந்து பெண்கள் தினம் சிறப்பாக அனுசரிக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு  தகுந்த திட்டமிடல் அவசியம் எனவும் கூறி சிறப்பு உரையை நிறைவு செய்தார்.  

        அதைத் தொடர்ந்து தோழர்.  முகமது ஜாபர்  மற்றும் தோழர் ஆதிவராகன்  ஆகியோர் போராட்டங்கள் பற்றி விளக்கி பேசினர். அனைவரும் அனைத்து போராட்டங்களிலும், வேலை நிறுத்தத்திலும் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. கோவையில்  நடைபெற்ற ஐந்தாவது அகில இந்திய மாநாட்டில் அமைப்பு செயலராக தேர்வு செய்யப்பட்ட தோழர். பெர்லின் கனகராஜ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. 

இறுதியில்  மாவட்டச் செயலர் தோழர் சிரில் ராஜ் அவர்கள் அகில இந்தியா 5 வது மாநாடு கோவையில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றதை வாழ்த்தியும், நமது மாநில செயலாளர் தோழர் R. ராஜசேகர் அவர்களையும், கோவை மாவட்ட செயலாளர் தோழர் குடியரசையும் பாராட்டியும், சென்னை மாவட்ட தோழர்களின் நிதி பங்களிப்பையும், பாராட்டி பேசினார்கள்.

             மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற்றது நமக்கு பெருமை. சங்க செயல்பாடுகள், தீர்வு கண்ட பிரச்சனைகள், இன்னும் தீர்வு காணப்படாத பிரச்சனைங்கள், e-PPO  வின் விளக்கங்கள், எதிர் காலங்களில் சங்கம் எடுக்கும் போராட்டங்கள், அதில் அனைவரும் பங்கேற்பதையும், தொகுத்து, தொகுப்புரை வழங்கி அனைவருக்கும் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவாதங்கள்

அனைத்தும் செழுமையானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது.

போராட்டவாழ்த்துக்களுடன்
R. சிரில் ராஜ் 
மாவட்டச் செயலர்
C G M  அலுவலகம் சென்னை 6.

Post a Comment

0 Comments