AIBDPA TN - DOT/CCA அலுவலக பென்சன் அதாலத்கள் அறிவிப்பு
தோழர்களே,
2026 ஆண்டின் முதல் காலாண்டுக்கான இரண்டு பென்சன் அதாலத்களை CCA TN அலுவலகம் அறிவித்துள்ளது.
வேலூர், திருச்சி மாவட்டங்களுக்கான இணைய வழி அதாலத் 26.2.26 அன்று நடைபெற உள்ளது. அதற்கான புகார்களை வரும் 18.2.26 அன்று மாலை 6 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
இரண்டாவது அதாலத் 10.3.26 அன்று கடலூர், புதுச்சேரி மாவட்ட ஓய்வூதியர்களுக்காக பாண்டிசேரியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான புகார்களை 24.2.26 அன்று மாலை 6 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
நான்கு மாவட்ட மாவட்டச் செயலர்களும் உடனடி கவனம் செலுத்தி தங்கள் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள ஓய்வூதியர் பிரச்சனைகளில் அதாலத் மூலம் தீர்க்க வேணடிய பிரச்சனைகளை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தேவையான சான்றுகள் உடன் கடிதங்கள் மூலம் அனுப்பி வைக்க வேண்டுமென மாநிலச் சங்கம் கேட்டுக் கொள்கிறது.
R ராஜசேகர் மாநிலச் செயலர்,
தமிழ் மாநிலம்.
11.2.26


0 Comments