Latest

10/recent/ticker-posts

ஈரோடு மாவட்ட பெருந்துறை மற்றும் சென்னிமலை கிளைகளின் இணைந்த மாநாடு

 ஈரோடு மாவட்ட பெருந்துறை மற்றும் சென்னிமலை கிளைகளின் இணைந்த மாநாடு






                ஈரோடு மாவட்ட அகில இந்திய BSNL - DOT ஓய்வூதியர் சங்க கிளை மாநாடு - பெருந்துறை மற்றும் சென்னிமலை கிளைகளின் இணைந்த மாநாடாக 10.02.2026 அன்று பெபெருந்துறையில் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கொடியேற்ற நிகழ்வு பெருந்துறை தொலைபேசி நிலைய வளாகத்தில்  சங்கக் கொடியினை கிளை பொருளாளர் தோழர். V.ராமகோடி ராஜன் ஏற்றி வைத்தார். பின்னர் மாநாடு அண்ணாசிலை அருகில், பாலாஜி பவன் அரங்கத்தில் நடைபெற்றது. பெருந்துறை கிளை தலைவர் தோழர். E.M.ரங்கசாமி மற்றும் சென்னிமலை கிளை துணை தலைவர் தோழர். வேலுசாமி ஆகியோர் கூட்டுத்தலைமை வகித்தனர். தோழர் S.N.மயில்சாமி, தோழர் லோகநாதன் ஆகியோர் வரவேற்புரை வழங்கினர்.

   மாவட்ட செயலாளர் தோழர் V.மணியன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். ஆண்டறிக்கை  பெருந்துறை கிளையின் சார்பில் கிளை செயலர் தோழர் S.N.மயில்சாமி அவர்களும் சென்னிமலை கிளையின் சார்பில் கிளை செயலர் தோழர் லோகநாதன் அவர்களும்   சமர்ப்பித்தனர். அதேபோல் பெருந்துறை கிளை பொருளாளர் தோழர். V.ராமகோடிராஜன் மற்றும் சென்னிமலை கிளை பொருளாளர் தோழர். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தத்தமது கிளையின் நிதிநிலை அறிக்கையினை  சமர்ப்பித்தனர். ஆண்டறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கைகளை மாநாட்டில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், 

          அகில இந்திய அமைப்பு செயலாளர் தோழர். N. குப்புசாமி சிறப்புரையாற்றினார். தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட செயலர் (NCCPA) தோழர். சின்னசாமி,  ஒப்பந்த ஊழியர் சங்க (TNTCWU) மாநில செயலர் தோழர். M.சையத் இத்ரீஸ், AIBDPA ஈரோடு மேற்கு 1 கிளைச் செயலர் தோழர் . சவுந்தரராஜன்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக  தோழர் S.N.மயில்சாமி நன்றி கூறி மாநாட்டை நிறைவு செய்து வைத்தார்.

மாநாட்டில் புதிய நிநிர்வாகிகளா க

பெருந்துறை கிளையில் 

தோழர் E.M.ரங்கசாமி தலைவராகவும், 

தோழர் S.N.மயில்சாமி செயலாளராகவும்,  

தோழர் V.ராமகோடிராஜன் பொருளாளராகவும் 


சென்னிமலை கிளையில் 

தோழர் C.மணி தலைவராகவும், 

தோழர் R.மணி செயலாளராகவும், 

தோழர் தமிழரசு பொருளாளராகவும் ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநாட்டில் தீர்மானங்களாக 

1.பென்ஷன் வாலிடேசன் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் 

2.ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் உடனே அமுல்படுத்திட வேண்டும் 

3.BSNL நிறுவனத்தை புத்தாக்கம் செய்திட வேண்டும்.

4.ஒப்பந்த ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதை நிர்வாகம் கைவிட வேண்டும்.

5.தொழிலாளர் விரோத நான்கு தொகுப்பு சட்டங்கள், விதை மசோதா, மின்சார மசோதா உள்ளிட்ட கோரிக்கைகளோடு ஓய்வூதியர் சங்க கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் பிப்ரவரி 12 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் 100 சதம் முழுமையாக கலந்து கொள்வது. ஆகிய தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டது.

பெருந்துறை சென்னிமலை AIBDPA கிளை மாநாடு அதிகப்படியான ஊழியர்கள்  தலைவர்கள் பங்கேற்ற மிக சிறப்பான மாநாடு பெருந்துறை மாநாடு. இந்த மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய பெருந்துறை கிளை சென்னிமலை கிளை அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

 தோழமையுள்ள 
வே. மணியன் மாவட்ட செயலாளர்
10/02/2026

Post a Comment

0 Comments