Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட சூலூர் கிளை கூட்டம்

 கோவை மாவட்ட  சூலூர் கிளை கூட்டம் 






தோழர்களே   !!                                  

             கோவை மாவட்ட  சூலூர் கிளை தோழர். ஜெயக்குமார் திலகம் கிளை தலைவர்  அவர்கள்  தலைமையில்  31 தோழர்கள் கலந்து கொண்ட கிளைக் கூட்டம், 10.02.26ல் சிறப்பாக நடைபெற்றது.  தலைமை உரைக்குப் பின் கிளைச் செயலர் தோழர் கிறிஸ்டி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார் . BSNLEU மாவட்ட செயலாளர் / தமிழ் மாநிலத் தலைவர்   தோழர். மகேஸ்வரன்  கோவையில் நடைபெற்ற AIC, 12 பிப்ரவரி பொது வேலை நிறுத்தம் பற்றிய விஷயங்களை சொல்லி வாழ்த்துரை வழங்கினார். 

        மாவட்டச் செயலர் /AGS தோழர் A.குடியரசு நடைபெற இருக்கும் பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தம், ஓய்வூதிய நிலைப்பாடு, மத்திய அரசாங்கத்தின் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி கருத்துக்களை பதிவு செய்தார்.  தோழர். சத்தியமூர்த்தி  AGS ஆக தேர்வு செய்த மாவட்ட செயலருக்கும், தோழர் மகேஸ்வரன் அவர்களுக்கு கிளைத் தலைவர் தோழர் ஜெயக்குமார் திலகம் அவர்கள்  கிளையின் சார்பாக சால்வை  அணிவித்து கௌரவித்தனர். இறுதியாக தோழர் இளம்பரிதி நன்றி கூறி கூட்டத்தை  நிறைவு  செய்தார்.

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments