தூத்துக்குடியில் COC சார்பில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கம்
.. 22.01.2026 இன்று தூத்துக்குடியில் (BSNLEU AIBDPA TNTCWU COC) கூட்டுக்குழு சார்பில் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கூட்டுக்குழுவின் தலைவரும், AIBDPA சங்கத்தின் மாவட்ட செயலாளருமான தோழர். P. ராமர் தலைமை தாங்கி உரையாற்றினார்.
கூட்டுக்குழுவின் கன்வினரும், BSNLEU மாவட்ட செயலாளருமான தோழர். G. ஸ்ரீதரன் வரவேற்புரை மற்றும் துவக்க உரையாக மத்திய அரசின் இன்றைய நிலை, BSNLன் இன்றைய நிலை, (3rd PRC) புதிய ஊதிய ஒப்பந்தத்தின் இன்றைய முன்னேற்றம் மற்றும் 12.02.2026ல் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தின் அவசியம் ஆகியவை குறித்து துவக்க உரை ஆற்றினார்.
AIBDPA சங்கத்தின் அகில இந்திய துணை தலைவர் தோழர். S. மோகன்தாஸ் புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பு அதன் தொழிலாளர் விரோத நிலைபாடு பற்றியும், விவசாயிகள் போராட்டம், 100 நாள் வேலைத்திட்ட முடக்கம் புதிய மின்திட்ட முரண்பாடுகளை விளக்கியும் 2.02.2026ல் நடைபெறும் பொது வேலைநிறுத்தத்தின் அவசியம் மற்றும் பங்களிப்பையும் விளக்கி சிறப்புரை ஆற்றினார்.
BSNLEU சங்கத்தின் மாநில உதவி பொருளாளர் தோழர். A. சிவகுமார் ஒப்பந்த ஊழியர்களின் இன்றைய நிலை மற்றும் 12.02.2026 அன்று நடை பெறும் வேலை நிறுத்தத்தின் அவசியம் பற்றி உரை ஆற்றினார். TNTCWU சங்கத்தின் மாநில பொறுப்பாளர் தோழர். D. தங்கமாரியப்பன் நன்றி கூற கருத்தரங்கம் நிறைவுற்றது.
மூன்று சங்கங்களின் சார்பாக 41க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் கூட்டுக்குழு சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.
P. ராமர், AIBDPA.
G. ஸ்ரீதரன், BSNLEU.
A. ஷீபா, TNTCWU.





0 Comments