Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட அவிநாசி கிளை பொதுக்குழு கூட்டம்

 கோவை மாவட்ட அவிநாசி கிளை பொதுக்குழு கூட்டம்





தோழர்களே

     இன்று  23.01.26 கோவை மாவட்ட அவிநாசி கிளைக் கூட்டம் தோழர். ஆரோக்கியநாதன் அவர்கள் தலைமையில்  13 அதாவது நூறு சதமான தோழர்களும்  கலந்து கொண்ட கூட்டமாக  நடைபெற்றது. கிளைச் செயலர் தோழர்.  கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்டச் செயலர் தோழர். A. குடியரசு நடைபெற்ற இயக்கங்களும், இன்றைய ஓய்வூதியர் நிலைமை பற்றியும், நடைபெறக்கூடிய இயக்கங்கள் பற்றியும் தனது  கருத்துக்களை  பதிவு செய்தார். 

            தொடர்ந்து மாவட்ட செயலாளர் அகில இந்திய துணை பொது செயலாளர் ஆக  தேர்வு செய்யப்பட்டதனால் கிளை சங்கத்தின் சார்பில் கிளை  செயலாளர்  சால்வை  அணிவித்து கௌரவிக்கப்பட்டது. தனிநபர்களாக கயித்தமலை  மற்றும் தோழர்கள் இணைந்து சால்வை அணிவித்து  வாழ்த்து செய்திகளை கூறினர். 

         தோழர் கணேசன் அகில இந்திய மாநாட்டில் சார்பாளராக  கலந்து கொண்டதற்கு பாராட்டு தெரிவித்தனர். இறுதியாக தோழர் கலீல் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments