Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட கணபதி கிளையின் பொதுக்குழுக்கூட்டம்

 கோவை மாவட்ட கணபதி  கிளையின் பொதுக்குழுக்கூட்டம்






தோழர்களே                            

            22/01/2026 அன்று  கோவை மாவட்ட கணபதி  கிளை பொதுக்குழுக்கூட்டம் கிளைத் தலைவர்  Com. K.சந்திரசேகரன்  அவர்கள் தலைமையில்   26 தோழர்கள் கலந்து கொண்ட கிளை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தலைமையுரைக்கு பின்,   கிளை செயலாளர்  தோழர். சந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.  தோழர் என் பி ராஜேந்திரன் மற்றும் தோழியர் பங்கஜவள்ளி மகளிர் அமைப்புக் குழு, மாவட்ட செயலர் தோழர் குடியரசு அகிலஇந்திய மாநாடு, இன்றைய சூழலில் நமது நிலைப்பாடு பற்றி எடுத்துரைத்தார்.

            தொடர்ந்து கோவையில் நடைபெற்று முடிந்த AIBDPAவின் 5வது அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய துணைச்  செயலாளராக தேர்வு செய்யப்பட்ட  மாவட்டச் செயலாளர் தோழர்.  A.குடியரசு அவர்களுக்கு   கிளை சங்கத்தின் சார்பாக. கிளை செயலாளர் சந்திரன் அவர்கள் சால்வை அணிவித்தார். மேலும் கிளைத் தலைவர்  தோழர். தங்கராஜ் அவர்கள் தனிநபராக அகில இந்திய துணைச் செயலாளராக தேர்வு செய்தமைக்கு பாராட்டி சால்வை அணிவித்தார். 

              தொடர்ந்து மாநாட்டில் சிறப்பாக பணியாற்றிய  தோழர்களுக்கு  கதர் ஆடை  அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். தோழர். வெங்கட்ராமன் COS எதிர்கால பிரச்சனைகளை பற்றி எடுத்துரைத்தார்.   கிளைச் செயலாளர் அகில இந்திய மாநாட்டின் நிதி வசூல்   விபரம்  அளித்தார்.    இறுதியாக  தோழர் சசிகுமார்  நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

A.குடியரசு மாவட்ட. செயலாளர் கோவை  மாவட்டம்

Post a Comment

0 Comments