Latest

10/recent/ticker-posts

20.01.2026 அன்று - மாபெரும் எழுச்சியான கருத்தரங்கு - வேலூரில்

20.01.2026 அன்று  - மாபெரும் எழுச்சியான கருத்தரங்கு - வேலூரில்

     




             20.01.2026 அன்று வேலூரில் பெல்லியப்பா கட்டிடத்தில் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் சிறப்பு கருத்தரங்கம் தோழர். P. முருகன் AIBDPA மாவட்ட செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

              முதல் நிகழ்வாக BSNLEU அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர். S. செல்லப்பா அவர்கள் BSNL ஊழியர் சங்க கொடியை ஏற்றினார். BSNLEU மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர். K. பெருமாள் விண்ணதிரும்  கோஷமிட்டார். கூட்ட அரங்கில் BSNLEU மாநில செயலாளர் தோழர். B. மாரிமுத்து வரவேற்புரை யாற்றினார். BSNLEU அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர். S. செல்லப்பா அவர்கள் சிறப்புரையில் 8 ஆண்டுகளாக BSNL ஊழியர் சங்கத்தின் தொடர் போராட்டங்களின் காரணமாக நஷ்டத்தில் இயங்கி வரும் BSNL பொதுத்துறையில் ஊதிய மாற்ற ஒப்பந்த உடன்பாடு ஏற்படுத்தி புதிய வரலாறு படைத்துள்ளது. 

             BSNL நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் BSNL Board ஒப்புதல் மற்றும் DOT, மத்திய அமைச்சரவை ஆகியோர் ஒப்புதல் வழங்க வேண்டி உள்ளது. நமது தொடர் போராட்டங்கள் மூலமாக ஊதிய மாற்றத்தை வென்றேடுப்போம் என்பதை உறுதிபட தெரிவித்தார். நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டத்தின் கடுமையான பாதிப்புகளை குறித்து விரிவாக பேசினார். இதனை எதிர்த்து நடைபெறும் பிப்ரவரி 12 வேலை நிறுத்த போராட்டத்தில் முழுமையாக அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதை கூறினார்.

                சென்னை கூட்டுறவு ( society) வழக்கின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கமாக பேசினார். தொடர்ந்து AIBDPA மாநில தலைவர் தோழர்.C. ஞானசேகரன், AIBDPA மாநில துணை பொருளாளர் தோழர். P. சரவணன், TNTCWU மாநில துணை செயலாளர் தோழர். D. கண்ணன் ஆகியோர் உரையாற்றினார்கள்.. 

                     கூட்டத்தில் BSNLEU மாவட்ட தலைவர் தோழர். K. இளங்கோவன் கருத்தரங்கில் மேடையில் பங்கேற்ற அனைவரையும் சால்வை அணிவித்து கௌரவித்தார். AIBDPA மாவட்ட தலைவர் தோழர். C. தங்கவேலு, மாவட்ட பொருளாளர் தோழர். P. லோகநாதன் மற்றும் பல முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

                            கருத்தரங்க கூட்ட முடிவில் TNTCWU மாவட்ட செயலாளர் தோழர் K. பிரகாஷ் நன்றி கூறி முடித்து வைத்தார். கருத்தரங்கில் 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்று எழுச்சியுற செய்தனர்..

தோழமையுள்ள
ப. முருகன்
மாவட்ட செயலாளர்
AIBDPA வேலூர்

Post a Comment

0 Comments