Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட உடுமலை கிளைபொதுக்குழு கூட்டம்

 கோவை மாவட்ட உடுமலை கிளைபொதுக்குழு கூட்டம்






தோழர்களே

            20.01.26 இன்று கோவை மாவட்ட உடுமலை கிளை 24 தோழர்கள் கலந்து கொண்ட  கிளை பொதுக்குழு கூட்டம் தோழர் C. மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர். வெள்ளியங்கிரி வரவேற்புரை நிகழ்த்தினார். கிளைச் செயலாளர் தோழர். சின்னசாமி துவக்க உரை நிகழ்த்தினார். 

     அடுத்து தோழர். பாபு BSNLEU மாவட்டத் தலைவர் & தோழர். கல்யாணராமன் வாழ்த்துரை   வழங்கினர்.  மாவட்ட செயலாளர் பல்வேறு கருத்துக்களை சங்கத்தின் நிலைப்பாடுகளை எடுத்துரைத்தார். மாவட்டச் செயலாளர் அகில இந்திய துணைச் செயலாளராக தேர்வு செய்தமைக்கு கிளை சங்கத்தின் சார்பாக மூத்த தோழர் பாலசுப்ரமணியம்   கதர் ஆடை அணிவித்து கௌரவித்தார்.  அகில இந்திய மாநாட்டில் உணவுக் குழு பணிபுரிந்த தோழர் பாலசுப்ரமணியம் மற்றும் சி மணி, கண்காட்சி குழு மற்றும் நிர்வாக குழுவில் பணிபுரிந்த தோழர்கள் கல்யாணராமன், சக்திவேல்  சார்பாளராக கலந்து கொண்ட தோழர் சின்னசாமி DS/AIAS ஆகியோருக்கு கிளை சங்கத்தின் சார்பாக கதர் ஆடை அணிவித்து கௌரவத்தினர்.

       தோழர். பழனிசாமி TNTCWU மாவட்டத் தலைவர், சிக்கந்தர் பாஷா, தோழர் வெங்கடேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக சக்திவேல் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments